பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 - - நாம் அறிந்த கி.வா.ஜ.

அக்காலத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளராக, விளங்கிய கு. ப. ரா ஜ கோ பா ல ன், ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், த. நா. குமாரசாமி, சிதம்பர கப்ரமணியன், சி. சு. .ெ ச ல் ல ப் பா போன்ற பலர். இவருடைய நண்பர்களாக இருந்தார்கள். அவர்களின் சிறந்த படைப்புகளைக் கலைமகளில் வெளியிட்டுப் பெரிதும் ஊக்கம் அளித்தார். இவரது முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. டாக்டர் ஐயரவர்களும் தம் இறுதிச் காலம் வரையில் கலைமகளுக்குக் கட்டுரைகள் வழங்கி நலம் செய்தார்கள்.

தேசிசுவிநாயகம் பிள்ளையிடமிருந்தும் பாடல்களைப்

பெற்றுக் கலைமகளில் இவர் வெளியிட்டார். பாரதி யாரைப்பற்றியும் பல கட்டுரைகளை வெளிவரச் செய்தார். . . . -

இவர் மொழிப்பகை அற்றவர். அதனால் பிற மொழி வல்லுநர்களான கா. ரீ. ரீ. த. நா. குமாரசாமி, த. நா. சேனாபதி, தோதேவி, செல்லம் போன்றவரி களுக்குத் தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழி களில் .ே ப ய ர் க்க உ த வி னார். அவர் களைப் பயன்படுத்திக்கொண்டு இந்தி, மராட்டி, வங்காளி, தெலுங்கு போன்ற பிற மொழிகளிலுள்ள இலக்கியச் செல்வங்களைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து கலைமகளிலும் வெளியிடலானார். -

தமிழில் சொந்தமாக எழுதிய நாவல்களையும். கலைமகளில் வெளியிடுவது நலம் என்று நினைத்தார். அதற்காக நாவல் பரிசுப் போட்டி ஒன்றைத் துவக். கினார். அந்தப் போட்டியில் பரிசு பெற்றதுதான் அகிலன் எழுதிய பெண்’ என்ற நாவல். கலைமகள் பரிசைப் பெற்ற திருமதி ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, போன்ற பெண் எழுத்தாளர்களும் பலர் உண்டு.

த மி ழ் ம க் கள் இ ந் த முயற்சிகளையெல்லாம். வரவேற்றனர். கலைமகள் பத்திரிகையின் பிரதிகள்