பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ைமகள் மைந்தன் ፰ Y£ .

ஐயரவர்களின் சதாபிஷேக சமயத்தில் கவைமகள் வெளியீடாக இவர் கொண்டு வந்த சிறப்பு மலரைத் த மி ழ ஞ ர் பல ரு ம் ப ா ர ட் டி ன ேத டு கல்கி'யே அதைப் பார்த்து மகிழ்ந்து இவரைப் பல இடங்களில் பாரா ட் டி னா ர். இதனைத் தம் ஆசிரியப்பிரானின் ஆசியே எனச் சொல்வி இவர் உளம் நெகிழ்ந்தார். - o

இவர் கலைமகளின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற ைடன் கதை நாவல்களுக்கு முதலிடம் தந்து

பிரசுரிக்கலானார். wo

பிரசுரிக்கப்படும் கதைகளுக்கு அன்பளிப்புக் கொடுப்பது என்பது அப்போது கலைமகளில் வழக்கம் இல்லை. அன்பளிப் பின் அவசியத்தை இவர்தாம் உணர்த்தி முதன்முதலில் 5 ரூ பாய் வ ழ ங் க ஏ ற் பாடு செய்தார். கலைமகளின் வளர்ச்சிக்கேற்ப அன்பளிப்புத் தொகையும் உயர்ந்தது. . . . - - - - அதிபரான நாராயணசாமி ஐயர் தொடர்ந்து பத்திரிகை நடந்து வந்தால் சரி’ என இவரிடமே எல்லாப் பொறுப்பையும் விட்டு மனநிம்மதி பெற்றார். -

இவரே கட்டுரை, கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மேற்கொண்டார். சிலர் தங்கள் படைப்பு களை நாராயணசாமி ஐயரிடம் நேரில் சென்று கொடுப் பார்கள். அவரிடம் கொடுத்தால் பிரசுரமாகிவிடும் என்று நம்பிக்கை. அவரோ அவற்றில் எந்தவிதக் குறிப்புங்கூட எழுதாமல் அப்படியே இவரது முடிவுக்கு அனுப்பிவிடுவார் இவரிடம் முழு நம்பிக்கை கொண்ட அதிபரின் இந்தப் பெருந்தன்மை, கலைமகள் தமது சொந்தப் பத்திரிகை என்ற மனோபாவத்தோடு இவரைச் செயல்ப்ட் வைத்தது. . : .

அடுத்த இதழில் என்ன வரப்போகிறது?’ என்று பதிப்பாளர் என்கிற முறையில்கூட நாராயணசாமி ஐயர். இவரிடம் கேட்க மாட்டார். -