பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 } நாம் அறிந்த கி.வா. :

தேர்ந்தெடுத்ததை அன்பர் கி.வா.ஜ., வெளியிட்டிருப்பது எனக்குத் தெரியும். பத்திரிகையின் தரத்தை உயர்வாக வைத்திருக்க வேண்டுமென்பதில் அவர் மிகுந்த ஆர்வம் உள்ளவர்” . எனக் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இவருடன் சேர்ந்து கலைமகளில் பணியாற்றியிருக்கும் அன்பர் கா. பூரீ.யூரீ குறிப்பிடுவார். - -

பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுத்ததை இரண்டு தடவை இவரே ப்ருஃப் பார்ப்பார். தவறு நேரக் கூடாது என்பது இவரது கொள்கை. - -

கல்பனா (ரகுநாதன்) எழுதிய ஞானப் பூ என்கிற கதையை இவர் லெளியிட்டபோது, “இந்தக் கதையைப் படித்தபின் மீண்டும் மீண்டும் இவர் எழுதமாட்டாரா என்ற ஏக்கந்தான் உங்களுக்கு வரும்'எனக் கதாசிரியரைப் பற்றிய அறிமுகத்தில் இவர் குறிப்பிட்டார். -

இவரது எழுத்தோவியம் கண்ணில் பட்டவுடன் யாரால்தான் அந்தக் கதையைப் படித்துப் பார்க்காமல் இருக்க முடியும்? -

கலைமகளில் தங்களது படைப்பு பிரசுரமாவதை ஒரு கவுரவமாகவே எழுத்தாளர்கன் பலரும் கருதினார்கள். இவ்ரது நாட்டம் எல்லாம், பழைய பண்பாடுகளைத் தொடர்பற்றதாகச் செய்யாமல், புதியதை விலக்காமல் என்றும் நிலைத்திருக்கும் இலக்கியப் படைப்புகளிலேயே இருந்தது. - - - :ஜனங்களுக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதை அவர்கள் விரும்புகிற முறையில் கொடுக்க வேண்டும். ஆபாசம், விரசம் இல்லாமல் யாவரும் விரும்பிப் படிக்கும் முறையில் கொடுக்க வேண்டும்’ என்கிற உறுதியோடு இவரது பத்திரிகைத் தொண்டு நடைபெற்றது.

இதனால் சிலரின் கோபதாபங்களுக்கும், வசைமொழி களுக்கும் இவர் ஆளாகியிருக்கிறார். : கலைமகளில் வெ னி யி டும் சில சின் கதை க ைள இவர் கொஞ்சம் எடிட் செய்து வெளியிடுவ்தும் உண்டு.