பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 岛7G

இதைக் கண்டித்து ஒருசமயம் ஒரு பெரிய எழுத்தாளர் நாராயணசாமி ஐயருக்கே காரசாரமாகக் கடிதம் எழுதி னார். அவரோ அந்தக் கடிதத்தை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டார். இவரிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. - இவருக்கு நிறையச் சுயமரியாதை உண்டு. சின்ன மனக் கஷ்டம் வந்திருந்தால்கூடக் கலைமகள் பத்திரி கையை விட்டுவிட்டுப் போயிருப்பார்: ஆனால், அப்படி ஒரு சிறு கஷ்டங்கூட ஏற்படாமல் கலைமகள் பதிப்பாளர் இவரைச் சுயமாகச் செயல்பட அதுமதித்தார் என்றால் பாருங்கள்! -

x х - - x *ஆனந்த விகடன் வாசன் அவர்கள் அடிக்கடி இவரைக் கூப்பிட்டனுப்புவது உண்டு. இவரது வீட்டிற்கும் வருவார். அவரது வீட்டிற்கு இவர் போகும்போதெல்லாம் மிகுந்த உபசாரம் செய்வார். -

ஒரு நாள் அவர் சொன்னார் : நாங்கள் ஒரு விஷ யத்தை உங்களிடம் எதிர்பார்த்தவர்களாக இருக்கிறோம். நீங்கள் ஆனந்த விகட னில் சேர்ந்தால் நல்லது என்று தோன்றுகிறது.’ - -

இவர் சொன்னார் : டாக்டர் ஐயரவர்களின் வேலை பையும் கவனித்துக்கொண்டு, கலைமகள் வேலையையும் பார்க்கிறேன். அந்த மாதிரியான வாய்ப்பு ஆனந்த விகட னுக்கு வந்தால் எனக்கு இருக்காதே’ என்றார். :ஆம்; உண்மைதான். ஆ.வி-க்கு வந்தால் முழு நேரமும் அங்கேதான் பணி புரியும்படி இருக்கும். ஐயரவர் களது பணி தடைப்படக்கூடும்’ என்றார் வாசன். அதில் தமக்கு விருப்பமில்லை என்று இவர் சொல்லிவிட்டார். பரந்த மனப்பான்மை : - - -

கலைமகளிலோ இவர் எப்போது வந்தாலும் சரி, எப்போது போ னாலும் சரி கண்டுகொள்ளாத அளவுக்குச் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். to . .