பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ሃሃ . நாம் அறிந்த கி.வா.ஜ.

ஏன் தம்மிடம் உதவி ஆசிரியர்களாக இருந்தவர். களையும், இதை அப்படிச் செய்யலாமே, அதை இப்படிச் செய்யலாமே என்று சொல்லித் துன்புறுத்த மாட்டார். நாராயணசாமி ஐயரோ, பிறகு ராமரத்தினம் அவர்களோ என்னைக் கூப்பிட்டால் என்னவென்று கேட்க ஐயரின் அறைக்குப் போவேன். இதுபோலவே கி. தாமோதரனும் அவருக்குப் பின்பு எஸ்.வி. ரமணியும் செல்வதுண்டு. “நாங்கள் ஐயரிடம் ஏன் போனோம், ஐயர் என்ன சொன்னார்?’ என்று கி.வா.ஜ. கேட்க மாட்டார். நாங்களாகச் சொன்னால் காதில் போட்டுக்கொள்வார். எங்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும்போது, எவ்வளவு கிடைத்தது?’ என்று கேட்பார். நாங்களாகச் சொன்னால் மகிழ்வார். அந்த மகிழ்ச்சியின் மேன்மையைக் கண்டு அண்ணனுக்கு உண்டாகும் பெருமிதம் தோன்றும் என எதையும் ஒளி மறைவு இல்லாமல் சொல்லக் கூடிய கா. பூரீ. ஆர். குறிப்பிட்டிருக்கிறார். - ~ .

இளமையிலேயே துறவு நெறியில் தோய்ந்துவிட்ட கி.வா.ஜ.வின் உள்ளத்தில் சுபாவமாகவே அந்தக் குணம் அமைந்துவிட்டது. நீரிலே இருந்தும் நீர் ஒட்டாத தாமரையிலையினைப்போல வாழ்ந்த இவரது குணம் சிலரது வெறுப்புக்கு இவரை ஆளாக்கியிருக்கத்தான் வேண்டும். - -

இவர் எவரையும் தமக்கு எதிரியாகக் கருதியதில்லை. மற்றிப் பத்திரிகை எதையும் தாக்கி எழுதவும் மாட்டார். கல்கி’, தேவன் போன்ற மற்றப் பத்திரிகை ஆசிரியர்களின் கதைகளையும் வாங்கிக் கலைமக'ளில் வெளியிடுவார். அதேபோல் இவரும் பல பத்திரிகைகளுக்கு

எழுதுவார். - . -

இவரை ஆசிரியராகப் பெற்ற பின் கலைமகள் பெரு மையும் பூரிப்பும் அடைந்தாள். . . . . . .” -

இவரால் உருவான எழுத்தாளர்கள் கணக்கில் அடங் கார். இவர்களில் சிலர், கலைமகள் பரிசுகளும் சாகித்திய தா-24