பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் ,曾?8

அகாதமிப் பரிசுகளும் பேற்று இன்று எழுத்துலகில் முன்னணியில் இருப்பவர்கள் ஆவர்’ என்று விமர்சன வித்தகராகிய கி. சத்திரசேகரனே மனநிறைவோடு இவரைப் பாராட்டியிருக்கிறார். -

அகிலன்’, ‘மாயாவி”, பி. வி. ஆர்., பூவாளுரி சுந்தர ராமன், ராஜம் கிருஷ்ணன், அதுத்தமா, ஆர். சூடாமணி, ஆர் வி., எல்லார்வி, லட்சுமி சுப்பிரமணியன் போன்ற பல ஆண் பெண் எழுத்தாளர்கள் கலைமகள்” குடும்பத்தில் உருவானவர்களே. . - * * * - 1957-இல் கலைமகள் வெள்ளிவிழாக் கொண்டாடி னாள்: 82-இல் யாவரும் தன்னைப் போற்றிப் புகழப் பொன்விழாக் கொண்டாடிப் பொலிவுற்றாள். இதனைக் கலைமகளின் பொற்காலம் என்றே சொல்லலாம். . .

நாராயணசாமி ஐயர் கலைமகள்’ பத்திரிகையை ஆரம்பித்தார். அவருக்குப் பின் அவர் புதல்வர் ராமரத்தினம் அதை வளர்த்தார். இன்று பேரர் நாராயண சாமி அதனைக் காப்பாற்றி வருகிறார். ,, .

அரை நூற்றாண்டுக்கும்மேல் இந்த மூன்று தலைமுறை. களோடும் சேர்ந்து, பாரம்பர்யம் மிக்க கலைமகள்’ பத்திரி கையின் ஆசிரியராகத் தம் கடைசிக் காலம்வரை பணி

யாற்றிய பெருமை கி.வா.ஜ.வுக்குக் கிடைத்தது.

ஆசானின் அரவணைப்பு.

ஐயரவர்களது சதாபிஷேக விழா சிறப்புற நடைபெற எல்லோரும் பாராட்டும்படியாக இவர் எழுத்துப் பணி

முதலியவற்றைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார்

அல்லவா? இது ஆசானுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இவருக்கும், இவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும். அவர் தனியே ஆடைகள் வழங்கி ஆசி கூறினார். இவருக்கே

தனியாகவும் சிறப்புச் செய்ததை, இவர் பிற்காலத்தில்

பலரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.