பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 379 நாம் அறிந்த கி.வா.ஜ்.

இவரது திறமையில் ஆசானுக்கு முழு நம்பிக்கை அப்போது ஏற்பட்டுவிட்டது. சதாபிஷேகத்தை அடுத்து அவரது உடம்பும் தளர்ந்து, முன்பு அடிபட்ட பாதம் சுரந்து கொண்டு உடல் சுகவீனம் ஏற்பட்டது. அதிக நேரம் உட்கார்ந்து வேலைகளை எல்லாம் முடித்துவிட வேண்டு மென்ற தாபம்ம்ட்டும் அவருக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது. எனவே, பதிப்புப் பணிகள் எல்லாவற்றையும் இவரிடமே ஒப்புவித்து, இலேசாகக் கண்காணித்து வரத் தொடங்கினார், -

காலையில் ஐயரவர்களுடன் இருந்து பதிப்பு வேலை களைக் கவனிப்பது, பிற்பகலில், பத்திரிகை அலுவலகம்

மறுபடியும் ஐயரவர்களுடன் இருப்பது, இரவில் தம்முடைய ஆராய்ச்சிப்படிப்பில் ஈடுபடுவது என இப்படி, மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் இவருக்கு வேலைகள் பெருகி விட்டன. வேலைகளில் எதனையும் குறைத்துக்கொள் ளாமல் எல்லாவற்றையும் இவர் எப்படிச் சமாளித்தார் என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். “. .

1935-ஆம் ஆண்டு மே மாதம் ரீமத் ஐயர் திருப்பனந் தாள் சென்றபோது இவரும் உடன் சென்றார்: கல்ல மகள் பத்திரிகை சம்ப ந் த மா க. குருபூஜையர்ன் மறு நாளே மட்டும் தாம் சென்னை வந்துவிட்டார்.

திருப்பனந்தாளில் சில: நாள் தங்கியிருந்து ஐயர வர்கள் இவருக்குத் தம் ஆசியுடன் எழுதிய ஒரு கடிதத்தில், இன்ன இன்ன பணிகளைச் செய்திட வேண்டுமென்பதைக் குறிப்பிடும்போது, பாடலின் விசேடக் குறிப்பு முற்றும் எழுதி உரிய இடத்தில் சேர்த்தல் நான் அதற்குள் சென்னை வர்ாவிட்டால், அதன் க்ளின் ப்ரூஃபை’ நான் இருக்குமிடத்திற்கு அனுப்பும்படி அண்ணாவிடம் சேர்ப் பித்தல்; அதன் பின்பு அகராதியைச் சேர்த்தல்; அதன் முகவுரையில் சேர்க்க வேண்டியவற்றை உரிய இடங்களில் சேர்த்து முதலில் பதிப்பிப்பதுடன், அதன் பின்பு கூடுமா