பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 386,

னால் முன்பு யோசித்தபடி திருமால், வைகை, மதுரை, முருகன், திருப்பரங்குன்றம், அழகர் மலை இவற்றின் விசேடக் குறிப்புகளைச் சுருக்கமாக அமைத்துச் சேர்த்தல்: திருமலையின் பாடல் மேற்படி கோவிலின்.சிலாசாசனத்திற். செதுக்கப்பட்டுள்ளதென்பதை முகவுரையில் சேர்த்தல்: பெருங்கதை"யின் எஞ்சிய மூலம், உரை இவற்றை அடுக் குவித்து, ப்ரூஃப்” பார்த்து அண்ணாவையே உத்தரவு கொடுக்கும்படி செய்தல். பெருங்கதை"யின் அரும்பத. அகராதி முதலியவற்றை டெக்ஸ்"டில் மார்க்’ செய்து, கொண்டு எழுதல்: எ முது வி த் த ல், புறநானூற்றை வழக்கப்படி செய்தல். எல்லாம் காலவரையறை செய்து கொண்டு அதன்படி முறையே செய்து வந்தால் எவ்வளவு கடினமான வேலையும் எளிதில் முடியுமென்பது தெரியுமே! நான் முன்னமே இவ்வாறுதான் செய்து வந்தேன்....மருந்து இரண்டு வேளையும் போட்டுக் கொண்டு வருகிறேன். குணமாகலாமென்று தோன்று கிறது” என்று எழுதியிருந்தார்.

ஆசானின் அறிவுரையின்படி காலவரையறை செய்து கொண்டு தம் பணிகளையெல்லாம் முறையாக இவர் செய்து வந்ததால் கடினமான வேலையையும் எளிதில் முடித்துச் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்ற இவரால் முடிந்தது. - .

X X - ×. ‘திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பில் ஈடுபட்டமை:

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்கிற எ ண் ண ம் ஐயரவர்களுக்கு.

இருந்ததை இவர் கூறுவார். ஆனால் அவரது காலத்தில் அது நிறைவேறவில்லை. -

பின்னால் 1950-இல் இவருடைய நண்பரும், முன்னாள் கல்வி அமைச்சருமான தி.சு.அவிநாசிலிங்கம், திருகுறள்க்