பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3恐互 நாம் அறிந்த கி.வா.ஜ.

சம்பந்தமாக ஒரு பெரிய துலை வெளியிட வேண்டும்” என விரும்பினார். அந்தப் பேருபகாரியிடம் இவர் ஐய ரவர்களின் எண்ணப்படி செய்யலாமே என யோசனை சொன்னவுடன், அப்படியே செய்யுங்கள்’ என இவரையே பணித்தார் அவிநாசிலிங்கம்.

கோவை பூரீ ராம கி ருஷ்ண மி ஷ ன் வித்தி யாலய வெளியீடாக அதனைக் கொண்டுவரும் பணியைத் துவக்கியவர் நம் குடியரசின் முதல் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் அவர்களே.

அப்பணியைப் பூர்த்தி செய்ய, சிவாஜ. தொடர்ந்து 12 ஆண்டுகள் உழைத்தார். - 3.

நம் நாட்டின் மறுமலர்ச்சிக்கும், விடுதலைக்கும் அடிகோலிய சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா 1963-ஆம் ஆண்டு நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அந்த ஆண்டு மார்ச்29-ஆம் நாள் நம் குடியரசுத்தலைவரா யிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அந்நூலைக் கோவை யில் வெளியிட்டார். பெரிய அளவில் ஆயிரம் பக்கங் களுக்கும் மேற்பட்ட அளவரிய திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு’ நூலை நா. மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். தமிழக ஆளுநராக இருந்த விஷ்ணுராம் மேதி. இவருக்குப் பொன்னாடை போர்த்தினார்.

Χ . X X

பாடம் சொல்லும் ஆற்றல் :

இப்படி இவர் மேற்கொண்ட பல பணிகளிடையே’ தம் வீட்டில் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் பலருக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்தும் வந்தார். -

1941.43-இல் த.நா. சேனாபதி போன்றவர்களுக்கும், பின்னால் அருணாசலம், வாணி சரணன், த.நா. குருசாமி, கா. ரீ. ரீ. பூவாளுர் சுந்தரராாமன், பேராசிரியர் வையாபுரிப் பி ஸ் ைசுயி ன் புதல்வி «orr ஜினி,