பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 38&

வரும் D. நாராயணமூர்த்தி அவர்கள் 5--ே86-இல் எழுதியது. இது: -

  • ‘என் தாயார் ஜே. சுப்பு அவர்களது வீட்டில் பணி செய்துகொண்டிருந்தார்கள். நானும் என் தாயாருடன் அவர்களது வீட்டிலேயே வளர்ந்து வந்தேன். -

கி.வா.ஜ., தம் இளமைக்காலம்தொட்டே கோபி செட்டிப்பாளையம் வந்தால் ஜே.சுப்பு அவர்களின் வீட்டிலேதான் தங்குவார்: .

சாதாரண நூறு வாட் பல்பு விளக்கொளியில், நடு வீதியில், அமைதியான இரவில் கி.வா.ஜ., கோதண்டராம கவுண்டர், வேம்பு, ஐயர், ராமநாத ஐயர் இவர்க ளெல்லாம் கம்பராமாயணத்தைப் பல கோணங்களில் சுவை ததும்ப ஆராய்ந்து அலசுவார்கள். அதுவே தற்போது ஊர்தோறும் தோன்றிச் சிறப்புற நடைபெற்று வரும் கம்பன் கழக விழாக்களுக்கு முன்னோடியாக இருந்தது எனலாம். கி.வா.ஜ. கோபி வரும் நாட்கள் எங்கள் யாவருக்கும் இனிமையான நாட்களாகும். அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதில் நான் மகிழ்ச்சி கொள்வேன். ஒரு நாள் சந்தியாவந்தனத்திற்குக் கி.வா.ஜ., உட்கார ஒரு கையில் பலகையும், மற்றொரு கையில் தண்ணீர்ப் பாத்திரமும் எடுத்து வந்தேன். அப்போது கி.வா. ஜ, சுப்பு அவர்களிடம், நாராயண மூர்த்தி நல்ல திறமைசாலி. ஒரு கையில் பல கை கொண்டு வருகிறான், பாருங்கள் என்றார். எல்லோரும் என்னைப் .பார்த்துச் சிரித்தார்கள்; நானும் மகிழ்ந்தேன்.’

  • சிலேடை என்பது, காவிய ரசனைக்கு எடுத்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும், மிக்ஸ்சரைக் கொறிப்பது போல ஒரு வகையான சுவையைத் தரும்’ என்று இவரே சொல்வார். டாக்டர் ஐயரவர்கள் பேச்சிலே சுவை :யான சிலேடைகள் அவ்வப்போது துள்ளி விழும். அவருடைய மாணாக்கராகிய இவருக்கும் அந்த வாசனை போனதில்லை! - . -