பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 நாம் அறிந்த கி.வா.க.

ராமசந்திரமூர்த்தியிடம் அதிக ஈடுபாடு கொண்டவர். வடமொழி, தமிழ் இலக்கியங்களிலும், சங்கீதத்திலும் நல்ல பரிசயம் உள்ளவர். சங்கீத வித்துவான்களையும் ஆதரித்து வந்தார். - - அவரும் சரி, அவருடைய மனைவி ராஜம்மாளும் சரி, தங்களுக்குக் குழந்தையில்லையே என்று வருந்தியதில்லை. ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரையும் தங்கள் குழந்தைகளாகவே எண்ணி வாழ்ந்தார்கள். ஆப்பிள் பழங்களை நறுக்கினால் வீட்டின் கொல்லைப்புறத்தி விருந்து வாசல்வரை யார் யார் இருந்தாலும் . பணி யாளர்கள் உள்பட - யாவருக்கும் இரண்டிரண்டு துண்டுக. ளேனும் கொடுத்துவிட்டுத்தான் அவர்களும் இரண்டு துண்டுகளைத் தம் வாயில் போட்டுக்கொள்வார்கள். - அமுத நிலையமெனும் புத்தக நிலையத்தைத் துவங்கு வதற்கு நம் அன்பர் கி.வா.ஜ.வுக்கு உதவியாக இருந்தவர் களில் ஜே. சுப்புவும் ஒருவர். இவரிடத்தில் அவருக்கு அளவற்ற அன்பு உண்டு.

ஒளவையாருக்கு நெல்லிக்கனி ஈந்த அதியர் கோமான் போல். தம் வீட்டில் முதன்முதலாகப் பழுத்த நாவற். பழத்தை இவருக்கு ஈந்து மகிழ்ந்தவர் அவர். -

“மேனி கருகிறத்தால் மேவுமுன்வாய்ச் செர்கிறத்தால்

ஆனவித்தை உள்ளே அடக்குதலால் -வானளந்த தேவர்கோன் கண்ணபிரான் ஜேசுப்பு வீட்டிலுதிர் காவற் கனியா கவில்.” . . . . எனக் கண்ணபிரானுக்கும், நாவற்கணிக்கும் சிலேடையாக, இவர் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்தவர் அவர். கி.வா.ஜ-வின் சொல்ாயமும் சிலேடை ஆற்றலும் :

ஜே.சுப்பு அவர்களின் ஆதரவில் படித்து, பட்டம் பெற்று. இன்று சேலம் பாரதி வித்யாலயத்து மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி