பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 386 :

அப்படியே அந்தப் பரதேசியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். இவர்களுக்கு அந்தக் காட்சி புல்ல ரிப்பை உண்டாக்கியது -

மெல்ல எழுந்திருந்து அவரிடம், தேகாபிமானத்தை விட்ட நீங்கள் பெரிய பாக்கியசாலிதான்’ எனச் சொன்ன போது ஐயரவர்களுக்கு நாத் தழுதழுத்தது: கண்களில் நீர் துளும்பியது.

படிக்காதவர்கள் என்றாலும் வயசானவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்துகொள்ளும். அதனால் நமக்கு நன்மையே உண்டாகும் என அறிவுறுத்துவது ஐயரவர்களின் வழக்கம்.

அதன்படியே தமது வயது முதிர்ந்த காலத்திலும் அவர் நடந்து வந்தார். அவருடன் இருந்த இவரிடமும் அந்தப் பழக்கமே குடிகொண்டது. அகந்தையின்றி ஏழையரினும் ஏழையாக இருப்பதையே இவர் தம் பாக்கிய மாகக் கருதினார். -

வெளியிடங்களுக்குப் போகும்போது தாம் தங்கும். வீட்டில் உள்ள முதியவர் யாராக இருந்தாலும் அவரைச் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கும் பழக்கத்தை இவர் கைவிட்டதேயில்லை. - இரு துறைகளிலே இவரது வல்லமை :

இவர் இலக்கியம், சமயம் ஆகிய இரண்டு துறை களிலும் உரையாற்றுவதில் வல்லவர். இலக்கியம்பற்றிப் பேச இவர் தயாராக இருந்தாலும் அதிகமாகச் சமயம் பற்றிப் பேசவே அழைத்தார்கள். பாரதி விழா, கம்பன் விழா என்பதாக நடைபெறும் சில இலக்கியக் கூட்டங் களில்மட்டும் அல்ல, இவர் அதிகமாகக் கலந்துகொண்ட சமயக் கூட்டங்களிலும் இலக்கிய நயம் சொட்டச் சமயம்பற்றிப் பேசுவார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் வழக்கறிஞர் ஜே. சுப்பி . ரமணிய ஐயர் என்கிற செல்வர் இருந்தார்: எம்பெருமான்