பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3母5 - நாம் அறிந்த கி.வா.ஜ.

ஆலய வெளிப்பிராகாராத்தைச் சுற்றி ஒரு முறை அங்கப் பிரதட்சிணம் செய்கிறார்: ‘ என்றார். - -

அவருக்கு எவ்வளவு வயசு இருக்கும்?'’ . :கிட்டத்தட்ட 70 வயசு இருக்கும்.’ o: “அவரை நான் பார்க்கவேண்டுமே! எங்கே இருக், கிறார் தெரியுமா? என்று ஐயரவர்கள் கேட்டார்.

இந்தக் கோயிலின் பக்கத்தில்தான் இருப்பார். சொல்லி அனுப்பினால் வருவார்’ என்றார் அன்பர்.

“சொல்லி அனுப்புவதா? அவர் இருக்கும் இடத்துக்கு நாமே போகவேண்டும். சுவாமி தரிசனங்கூடப் பிறகு செய்துகொள்ளலாம். -ஐயரவர்களுக்கு இருந்த இந்த வேகத்தைக் கண்டு, அவரை ரமண பகவானைப் போன்ற பெரிய ஞானி, மகான் என்று ஐயர் எண்ணிக்கொண்டார் ப்ோலும்! என்று அந்த அன்பர் நினைத்தார்: அவர் சாதாரணப் பரதேசிதான். படிப்போ, வேறு மகிமையோ அவரிடம் இல்லை’ என்றார். . *

எனக்கு இப்படி அங்கப்பிரதட்சிணம் செய்ய வேண்டுமென்று எவ்வளவோ ஆசை. அது முடிகிற காரியமா? இந்த உடம்பை நாம் எவ்வளவு கவனித்துப் பாதுகாக்கிறோம். இந்த வயசில் இவ்வளவு பெரிய சுோயிலைச் சுற்றிப் புரண்டு நாள்தோறும் அவர் அங்கப் பிரதட்சிணம் செய்து வருகிறார் என்றால், அது என்ன எளிய காரியமா? அவரைப் போய்ப் பார்க்கத்தான் வேண்டும்’ என மிகுந்த உணர்ச்சியோடு சொன்னார் ஐயரவர்கள்.

அந்த அன்பர் இவர்களை அழைத்துக்கொண்டு போகும்போது, எதிரே அந்தப் பரதேசியே வந்தார்.

“இவர்தாம் நான் சொன்னவர்’ என்று அந்த அன்பர் கூறினாரோ இல்லையோ ஐயரவர்கள் அவரெதிரில்

GsFair sonrff, .

கோயிலுக்குப் போகும் கோலத்தில் இடுப்பில் அங்க வஸ்திரத்தைக் கட்டிக்கொண்டிருந்த ஐயரவர்கள்