பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 384

ஓரிடத்தில் பே சி ய ைத ேய கூறாமல், புதுபுதுக் கருத்துக்களை .ெ வளி யி ட எ ன க் கு விஷயங்கள் கிடைக்கின்றன என இவர் தாம் செய்து வரும் தொண் டினால் அடைகிற பயனைச் சொன்னார்.

x: - X. Χ

ஆசானின் அடிச் சுவட்டில் :

ஐயரவர்களுடன் இவர் ஒரு முறை அரியலூர் சென் நிருந்தார். தமக்கு இளமைக்காலத்தில் தமிழ் கற்பித்த சடகோபையங்காருடைய மனைவியாரை அவரது முதிய பிராயத்தில், ஐயரவர்கவள் தரையில் படிந்து வணங்கிய போது இவரும் அவ்வாறே வணங்கிக்கொண்டார்.

ஒரு முறை விக்கிரமசிங்கபுரத்தில் இருந்தபோது ஐயரவர்களுக்கு வந்த ஒரு கடிதத்தை ஒருவர் வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார். நீண்ட வெண்மைத் தாடியோடு கூடிய அந்த முதியவரிடமிருந்து கடிதத்தைப் பெறும்போது ஆவருக்குச் சாஷ்டாங்கமாக் கீழே விழுந்து ஆசான்’ வணங்கியதையும் இவர் பார்த்திருக்கிறார்.

ஒரு முறை தம் ஆசானுடன் இவர் திருவண்ணாமலை சென்றார். அப்போது ரமண பகவான் இருந்தார். முன்பும் ஒரு முறை ரமணாசிரமம் சென்று பகவானை ஐயரவர்கள் தரிசனம் செய்துகொண்டது உண்டு.

இந்த முறையும் இவர்களைக் கண்டவுடன் அங்கிருந் தவர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பகவானிடம் அழைத்துச் சென்றார்கள். பழுத்த பழமாகிய ஐயரவர்கள் பகவானுக்குமுன் வீழ்ந்து வணங்கி எழுந்தார். ரமண் முனிவரின் அருளாசியைப் பெற்ற பின்பு அருணாசலே, சுவரரைத் தரிசனம் செய்துகொள்ளத் திருக்கோயிலுக்குச் சென்றார். - - -

அப்போது உடன் வந்த அன்பt பேச்சினிடையே ஒரு பரதேசியைப்பற்றிச் சொன்னார்; அவர் நாள்தோறும்