பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 . - நாம் அறிந்த கி.வா.ஜ.

நெய்யப்படுகிறது என்பனபற்றி மிக விரிவாக எழுதிவிட்டு: வந்தவரைப் பார்த்து இரங்காமல் வேறு ன்ன்ன செய்வது? } -

இவருடைய கோபிசெட்டிப்பாளையம் நண்பரும் அமுத நிலைய நிர்வாகியுமான ரா. ரீ. ரீகண்டன் அப்போது அங்கு இருந்தார். இவர் எப்போதும் எதை யாவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்’ என்பது ஒன்றே அவரது குறிக்கோள். - .

1.இவர்களுக்குப் போய்த் தமிழ் சொல்லிக் தருகிறேன் என உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறீர்களே! பேசாமல் உட்கார்ந்து எதையாவது எழுதுங்கள்’ என வழக்கம்போல் அறிவுரை சொல்லிச் சென்றார்.

இதுபற்றி இவர் அப்போது என்ன சொன்னார், தெரியுமா? நான் என் ஆசிரியப் பெருமானிடம் தமிழ் கற்றேன். கவிஞர் கோமான் பிள்ளையிடம் தமிழ் கற்ற அவர் தம் வாழ்நாள் முழுக்கச் சிலருக்காவது தமிழ், சொல்லிக்கொண்டே வாழ்ந்தார். தமிழ் ஆசிரியர் பணியை ஏற்கவில்லை என்றாலும் நீரும் யாருக்காவது தமிழ்ப் பாடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். எனக்கு இளமையில் பாடம் சொன்ன சடகோபையங்கார், கம்பத்தை வைத்துக்கொண்டாவது பாடம் சொல்ல வேண்டும், கேட்பவனை உத்தேசித்துச் சொல்லக் கூடாது. பாடம் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது, பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம் பெறும் எனச் சொல்வார் என்று எனக்கு உணர்த்தி யிருக்கிறார். இந்த அநுபவ வாக்கு எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நானல்லவா உணர்வேன்? இவர்களுக்கு என்ன தெரியும் திடீர் திடீரென்று பள்ளி களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும், சபைகளிலிருந்தும் பேச அழைப்புகள் வருகின்றன. அதற்காக என்று தயார் செய்துகொள்ள எனக்கு எங்கே நேரம் இருக்கிறது? பலருக்குத் தமிழ் சொல்லித் தந்துகொண்டிருப்பதால்