பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கலைமகள் மைந்தன் - .°&Ꮽ0

பல நூல் வெளியீடுகளில் ஈடுபட்ட புலமை : -

ஐயரவர்கள் தக்கயாகப் பரணி நூலை அச்சிடும் போது இவர் ஒருமுனைப்பான ஆர்வத்தோடு அதில் ஈடுபட்டார். அதனால் அம்பிகையைப்பற்றிப் பல துட்பமான செய்திகளை இவரால் அறிந்துகொள்ள முடிந்தது.

காசிமடத்துத் தலைவர் பூரீலபூரீ காசிவாசி அருணந்தி சுவாமிகள், அபிராமி அந்தாதி நூலை உரையுடன் வெளியிட வேண்டுமென்று பணித்தபோது இவர் அந் நூலுக்கு உரையெழுதி அளித்தார். 1944-ஆம் ஆண்டு .ஜூன் மாதம் 4-ஆம் தேதி பூரீ குமரகுருபர சுவாமிகளின் குருபூஜை நன்னாளில் அதனை வெளியிட்டார்கள்.

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவிலில் தேவி உபாசகராகிய அபிராமிபட்டர் விழா’ 13-2-60-இல் நடந்தது. அப்போது அபிராமி அந்தாதி க்கு உரை எழுதிய இவரை அழைத்திருந்தார்கள்:

  • பைந்தமிழ்க் கடவில் மூழ்கிப் பருவரல் சிறிதும் இன்றி

ஐக்திணை கெறியளாவி அக்கடல் தந்த முத்தம் ஐந்தையும் எடுத்துக் கோத்த அந்தணப் ‘. . . .

- - - புலவர் தொண்டில் மைந்தனைப் போல ஊக்கம் காட்டிடு மைந்த , -- - هurزا( si۰۰ تا காந்தமலை என்றலுமே கண்ணருவிதனைக் காட்டும் ஏந்தலுனைக் காண்பதுவே எங்கள்பெருந் தவமாகும்’

is . .

எனத் தஞ்சைக் கவி கே.எஸ். ரர்மசந்திரன் வரவேற்பிதழ் வாசித்துக் கொடுத்தார். அப்போது தஞ்சைவாசிகள் அன்பர் கி.வா.ஜ.வுக்குத் தங்கத் தோடா அணிவித்துச் சால்வை போர்த்தி மகிந்தார்கள். -- - . . . . ;

இவரது வரவை எதிர்பார்த்து முன்கூட்டியே தஞ்ச்ை ரெயில் ஜங்க்ஷனில் காத்திருந்த அன்பர்கள் இவரை மாலையிட்டு வரவேற்றார்கள். - &