பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雀汉台 நாம் அறிந்த கி.வா.ஜ.

அவரிடம் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு, அவர் எழுதியுள்ள இளமை விருந்து”, உள்ளொளி போன்ற ‘ல் தால்களைப் படித்து அவரைப் போலவே எழுத இவர் உ9தி ஆரம்பகாலத்தில் முயன்றது உண்டு. , ,

ராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்தசபையின் ஆண்டு விழாக்களில் இவரும் கலந்துகொண்டு பேசியிருக் கிறார். உங்கள் ப்ேச்சு மிகமிக தன்றாக இருக்கிறது. இந்தக் காலத்துக்கு உங்களுடைய பேச்சுத்தான் மிகவும் இன்றியமையாதது. இப்ப்டிக் கடவுள் உணர்ச்சியை மக்கள் உள்ளத்தில் வளர்க்கும் கூட்டங்கள் மூலைக்கு மூலை நிகழ வேண்டும். தெய்வபக்திப் பிரசாரந்தான் எங்கும் இடக்க வேண்டும். அதையும் உங்களைப் போல் நன்றாகப் படித்தவர்கள் செய்யவேண்டும். என்று மனமாரப் பாராட்டியிருக்கிறார், திரு. வி. க. . : “திருமுகாற்றுப்படையை வழிகாட்டி என்றவர் யார்? அறிமுகம் என்று உள்ளுறையை உணர்த்தினவர் surfa விளக்கம் கூறிக் கூறி உரைகண்டவர் யார்: எனத் திரு. வி. க., அவர்களே இவர் எழுதிய வழிகாட்டி” என்ற நூலுக்குச் சிறப்புரை வழங்கியுள்ளார்கள். -

கச்சுக் காய்ச்சலில் படுத்தது : - . . . . . - : 1964-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் இவர் அ'ரத்துடன் வீட்டிற்கு வந்தார். உடம்புக்கு ஏதாவது . வந்தால் இவர் மருந்து சாப்பிடுவது முன்பு வழக்கமில்லை; பிறர் சொல்லையும் கேட்கமாட்டார். ஜூரம் அடித்தாலும் பச்சைத் தண்ணிரை முகந்து தலையில் விட்டுக்கொண்டு நீராடி விபூதியைப் பூசித் திருப்புகழ் பாடுவார். * , இம்முறை இவரது இந்தத் துணிச்சல் பலிக்கவில்லை சேர்ந்தாற்போல ஐந்தாறு நாட்கள் ஜூரம் போவதும். வருவதுமாகக் கண்ணாமூச்சியாடியது: விடவில்லை.

டாக்டர் வந்து டைஃபாய்டு என்று கண்டுபிடித்து மருந்து கொடுத்தார். இவர் மெலிவுற்றுப்படுக்கையிலேயே இருந்தார். சதா முருகனுடைய தியானந்தான்,