பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 412

பெருமையைச் சுவாமிகள் உணரவேண்டுமென்பதுபோல இவரை அழைத்துச் சென்றவர்கள் சொன்னார்கள்.

‘சாமிநாதையன் நம்மிடம் வந்திருக்கிறானோ?” என அவரிடமே சுவாமிகள் கேட்டவுடன் சாமியாரது பொது அறிவு பலருக்கும் வெட்டவெளிச்சமாகியது! -

எங்கள் ஆசான் மகாபாக்கியசாலி. 1942-இலேயே காலமாகிவிட்டார். நான் தா ன் மகாபாவியாகத். தடுமாறிக்கொண்டிருக்கிறேன்!” என்று சொன்ன இவர், அப்புறம் அதிக நேரம் அங்கே தங்கவில்லை.

நண்பர்களின் வற்புறுத்தவின் பேரில், 4.12.1958-இல், நடைபெற்ற சுவாமிகளின் பாராட்டுக் கூட்டத்தில் இவர் கலந்துகொண்டு பேசினார்; என்றாலும், அன்றைய கூட்டத்தில், அற்பு த த் ைத ப் பாராட்டுவதைவிட, அன்பையே சு வா மி கள் பாரா ட் ட வேண்டும்’ என்பதையே மையமாகக் கொண்டு இவர் பேசினார். “தமிழ்த் தென்ற"லிடம் பேரன்பு : * , , நமது சமுதாயத்திற்குப் பலவகையிலும் தொண்டாற்றி யுள்ள தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தர முதலி யாரை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. -

இணையாதவற்றை யெல்லாம் இ ைண த் த வர் திரு. வி. க. வேதாந்திகளின் தொடர்பு உடையவர். மேல்நாட்டுத் தத்துவ நூல்களின் கருத்தையெல்லாம் உணர்ந்தவர்: உலக சமய சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவர். . .. х. - -

மார்க்ளியத்தில் நல்ல பற்று உடையவர்; எனினும் காந்தியத்தில் ஊறியவர். ஒல்லியாய், குடுமியும், கதராடையும் துலங்க, நெற்றியில் திருநீறு நிலவ ஒரு வைதிகரைப் போல இருப்பார், அவரது உள்ளமோ சீர்திருத்தத்தை விரும்பியது. வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் யாவருக்கும் உதவிய் வள்ளலாராகவே அவர் விளங்கினார். -