பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411 நாம் அறிந்த கி.வா.ஜ:

போரூர் ஆண்டவனே, உன்பேரில் சிதம்பர் சுவாமிகள் பாடியிருக்கிறாரே, அந்தப் பக்தர் பாடிய பாடலொன்றைச் சொல்ல வேண்டும்’ என்றார் இவர். திருப்போனார்மாலையைப் படித்திருந்தாலாவது அவன் அதைச் சொல்வியிருக்கலாம். நான் போகிறேனடா’ எனச் சொல்லி அந்த வாலிபன் தொப்பெனக் கீழே உட்கார்ந்துவிட்டான். கூட்டத்தினர் வாய்விட்டுச் சிரித்தார்கள். -

இதற்காகத்தான் தான் முன்பே சொன்னேன்; இப்படியெல்லாம் செய்து சாதாரண மக்களைப் பயமுறுத் தாதீர்கள். தன்னம்பிக்கையை அவர்கள் இழந்துவிடு வார்கள். முருகனின் நாமத்தைச் சொல்ல வேண்டும். அவனது திருவுருவை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்தினால் அகத்துய்மை ஏ ற் படு ம். இன்ப துன்பங்ளைத் தாங்கிக்கொள்ளும் மனப் பண்பு வளரும். இதுதான் மெய். இதைச் சாதிக்கும் பணியில் இனி மேலாகிலும் ஈடுபடுங்கள்’ என்று ஒரு சிறி சொற் பொழிவையே ஆற்றிவிட்டு வந்தார். . .

இவருடைய நண்பர் பெரிய சுவாமிகளையும் பார்த்து வர் இவரை அன்று இரவே அழைத்துச் சென்றார்.

ஒர் அறையில் கீழே விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் இவர்கள் உட்கார்ந்தார்கள். சுவாமிகள் உட்கார அந்த அறையில் ஒரே ஒரு நாற்காலிதான் போடப்பட் டிருந்தது. அதில் சுவாமிகள் அமர்ந்திருந்தார். - - அவருடைய கை கால்களைச் சீடர்கள் பிடித்துவிடத் தொடங்கினார்கள். - - - சுவாமிகள் தம்முடைய சித்து விளையாடல் எதையும் இவரிடம் செய்துகாட்டவில்லை. இவன் கலைமகளில் நம்மைப்பற்றி எழுதியிருக்கிறானோ?’ என்று தம் அருகின் இருந்தவரிடம் அவர் கேட்டது பலரது காதிலும் விழுந்தது. இவர் எம்.ஏ., படித்திருக்கிறார். தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையரிடம் படித்தவர்’ என் இவரது: