பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429 நாம் அறித்த கி.வா.க.

ஆசானின் பரிவு :

இந்த நிலைமையில் இவர் சென்னையில் தம் சிறிய கங்கைக்கு ஒரு வரன் பார்த்தார். பிள்ளைவீட்டார் சைதாப்பேட்டையில் இருந்தார்கள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த வரன் சீனிவாசன் என்பவர் (ராம்ராம் என்று பிற்காலத்தில் சொல்விக்கொண்டேயிருந்தவர்). - ராமகிருஷ்ணா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர். எல்லோருக்கும் அவரைப் பிடித்திருந்தது. முகூர்த்த நாள் குறித்தார்கள். அதே சமயம் சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து மேலும் ஓராண்டுக்கு இவரது ஆராய்ச்சி மாணவர் காலமும் நீட்டித்துக் கொடுக்கப்பட்டது. இவரும் தாய் தந்தையர் மகிழத் தம் மருமான் ராமுவுடன் கொஞ்சி விளையாடி’ மகிழ்ந்து வந்தார்.

தங்கைக்கு 12 - 5 - 37 அன்று திருமண முகர்த்தம். வைத்திருந்தார். மாப்பிள்ளை அழைப்புக்கு முன் தினம் சின்ன மருமான் ராமுவுக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று. நச்சுக் காய்ச்சலில் குழந்தை கண்ணைத் திறக்கவில்லை. . . . . .

செல்லமையரும் இவரும் குழந்தையை ராயப்பேட்டை மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றார்கள். பயனில்லை. வீட்டில் கல்யாணம் நடக்க இருந்ததால் குழந்தையின் சவத்தைச் செல்லமையர் தம் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தார்.

அன்பர் கி வா.ஜ.வுக்குத் துயரம் தாங்க முடியவில்லை. எனினும் கடமை மறவாமல் மண ஏற்பாடுகளைக் கவனிப்பதில் ஈடுபட்டார். மனித குலப் பண்பாடுகளின் சிகரமாக விளங்கிய பூரீமத் ஐயர், அந்த நேரம் தம் தள்ளாமையைப் பொருட்படுத்தவில்லை; தனியாக அவன் என்ன சேய்வான்?’ எனச் சொல்விக்கொண்டு.