பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் . 垒苏伊

இவருடைய தங்கையின் திருமணம் முடியும்வரை இவருடன் கூடவே இருந்து வந்தார்; பொருளுதவியும் செய்தார்.

X z - - - х 咒 ஒரு சிறு சம்பவம் : -

திருமணத்திற்குப்பின் ஒரு நாள் காலை இவர் ரீமத் ஐயரின் வீட்டில் படித்துக்கொண்டிருந்தார். - .

அலுவலகம் போவதற்குமுன் அண்ணா அங்கு வந்தார்: அவர் கையில் பதிற்றுப்பத்து நூல் கட்டு இருந்தது. “இதைப் பதிப்பிக்க வேண்டும். குறிப்புகள் எழுது’ என அதனை இவரிடம் கொடுத்தார். ... . -

பரீட்சை முடிந்தபின் எடுத்துக்கொள்கிறேனே” என இவர் சொன்னபோது, குடும்பக் கவலை காரணமாகவோ என்னவோ அண்ணா, சலிப்புடன் தம் கையிலிருந்த பதிற்றுப்பத்துப் புத்தகக் கட்டை அப்பால் போட்டு விட்டுப் போய்விட்டார். -

தரையில் கிடந்த பதிற்றுப்பத்து’க் கட்டை எடுத்துத் திரும்ப அடுக்கி வைத்துவிட்டுத் தம் ஜாகைக்கு வந்தார், கி.வா.ஜ. அன்று அலுவலகம் போகவில்லை. ,

பரீட்சைக்குப் படிக்கவும், தாம் எடுத்துக்கொண்ட காவியம் பற்றிய ஆராய்ச்சி நூலை எழுதி முடிக்கவும் இவருக்குத் தனிமையும் நேரமும் தேவைப்பட்டன.

இதற்கிடையில் தம் தாய்தந்தையர் மோகனூர் போகத் துடித்துக்கொண்டிருந்த நினைப்பு வந்தது. இவருக்கும் காந்தமலையானை உடனே தரிசித்தாக வேண்டுமென்ற தாகம் எடுத்தது.

இன்று நாம் எல்லோரும் மோகனூர் போகிறோம்” என்றார். வீட்டில் இருந்தவர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி: மறு பக்கம் இந்தத் திடீர்ப் பயணத்துக்குக் காரணம் தெரியாத குழப்பம். ஏதாவது கேட்டால் பயணம் தடைப் பட்டுவிடப் போகிறதே என்று, யாரும் எதுவும் இவரிடம் , கேட்கவில்லை. சாமான்களைக் கட்ட லா னார்கள்.