பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 . * - - Aس நாம் அறிந்த கி.வா.ஜ. பிற்பகலில் ரீமத் ஐயரிடம் போய்ச் சொல்லிக் கொண் டு ம் வந் தார் கள். இ வ. ரு - ன் -- அன்றைய இரவே மோகனூர் கிளம்பினார்கன். மோகனூர் போவதற்குமுன் இவர் செய்ய வேண்டிய பணி ஒன்று இருந்தது: தினமணி ஆண்டு மலருக்கு இவரை ஏதாவது எழுதித் தரும்படி கேட்டிருந்தார்கள். இவரும் ஒப்புக்கொண்டிருந்தார், -

இந்த அவசரத்தில் எதை எழுதுவது என யோசித்தார். துன்பத்தில் இவர்களை ஆழ்த்திவிட்டுச் சென்ற சின்ன மருமான் ராமுவே நினைவுக்கு வந்தான். அவனது கள்ளச் ՑոifiւյՇլյ இவரது உள்ளத்தைத் துளைபோட்டது. இவருடைய உடம்பில் அவன்"கை பட்டிருந்த இடமெல்லாம் சுட்ட புண்போல எரிச்சலெடுத்தது. இவருடைய காதில் அவன் பேசிய மழலை மொழி ஒலித்தது. சாந்தி பிறக்கவில்லை. இவற்றையே ஒரு கவிதையாக்கினார்: என்றும் இளமை என்கிற தலைப்பில் இவர் அந்தக் கவிதையைத் தினமணி'க்கு அனுப்பி வைத்தார். வெட்ட வெளியினில் தோன்றியழியும் .

மின்னலைப் போலே ஒளிவிட்டு மறைந்தான் பொட்டை யமனுக்கொரு கருணையில்லையோ?

பூவா அரும்பை அக்தோ கிள்ளிவிட்டான்’ என இவர் எழுதிய அந்தக் கவிதை குழந்தை ராமுவின் நினைவாக, உள்ளவாறே அமைந்த கற்பனையே எனினும் அதிலும் கலைத் தன்மை இருக்கத்தான் செய்கிறது, * - அன்றைய தினம் இரவு அண்ணா தம் அலுவலகத்தி லிருந்து வரும்போதே நேரமாகிவிட்டது. கணபதி ஐயர் மட்டும் இருந்தார். இவரைக் காணவில்லை. தம் தாய் தந்தையர்களை அழைத்துக்கொண்டு இவர் மோகனூர் போயிருப்பதாகக் கணபதி ஐயர் சொன்னார்.

என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்றார்?” அண்ணா. - - .

  • னங்களுக்கும் தெரியாது. பூரீமத் ஐயரிடம் வந்து சொல்லிக்கொண்டு போனாராம்.’ . . . . . . . . . . ;