பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 454.

தியாகராச செட்டியாரைப்பற்றி ஏ ம் க ன .ே வ பிள்ளயைவர்கள் சரித்திரத்தில் ஐயரவர்கள் குறிப் பிட்டிருந்தார்.

தியாகராச செட்டியார் கும்பகோணம் அரசு க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்து வந்தார். அங்கு மற்றப் பேராசிரியர்களுக்கு இருந்த மதிப்பு அவருக்கும் இருந்தது. - -

இயற்கையறிவு, கம்பீரமான குணம், பிள்ளையவர் களுடைய பழக்கம், திருவாவடுதுறை மடத்துச் சார்பு இவையே அவர் பெருமை அங்கனம் விருத்தியாவதற்குக் காரணங்களாக அமைந்தன எனலாம். -

பிள்ளையவர்களுடன் பட் டி ச் சுரம் போகும் போதுதான் ரீமத் ஐயர் முதல் முறையாக தியாகராச செட்டியாரைப் பார்த்திருக்கிறார். » х பளபளவென்றிருந்த அவரது மேனி நல்ல சிவப்பு. அதிக உயரமும் இல்லை; குட்டையும் இல்லை. நல்ல பலம் பொருந்திய உடற்கட்டு. அவரது நடையில் கம்பீரமும், பார்வையில் தைரியமும், பேச்சில் துணிவும் காணப்பட்டன. பிள்ளையவர்களின் முன் அவர் சாஷ்டாங், மாகப் பணிந்து எழுந்தபோது பிள்ளையவர்களின்பால் அவருக்கிருந்த அன்பும் பணிவும் நன்றாக வெளிப்பட்டன”. என்பதாகத் தியாகராச செட்டியாரைப்பற்றி ரீமத் ஐயர் விரிவாக என் சரித்திரத்திலும் எழுதியுள்ளார். என்றாலும், அவரது மனம் நிறைவு கொள்ள வில்லை. வாழ்வில் நமக்குச் சிலர் செய்த உதவிகள் சில நேரமே பயன்படும்; சிலர் செய்தனவோ ஆயுள் முழுவதும் பலனளிக்கும். தம் உத்தியோகத்தையே அவருக்கு அளித்துப் பிறர் கையை எதிர்பாராத் நிலைமையைச் செய்வித்தமையால் அந்தம்கோபகாரியர்ன் செட்டியாரை, ரீமத் ஐயர் மறந்ததேயில்லை. எனினும், ஏதோ காரணத்தினால் முதன் முதலாகத் தாம் பதிப்பித்த இந்தாமணி முகவுரையில் தியாகராச செட்டியாரின் பெயரை ரீமத் ஐயர் எழுதாமல் விட்டுவிட்டார்.