பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vi

தமிழ் பயின்று, பின்பு எம். ஏ., தேறியவர்தாம் என்பதை அறிந்து மகிழ்கிறேன்.

இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும்: ஒரு காலத்தில் விவேக போதினி’ என்ற சிறந்த தமிழ்ப் பத்திரிகையை நட்த்தி வந்தவர் அமரர் அல்லயன்ஸ் வி. குப்புசாமி ஐயர், கலைமகள் தொடங்கிய சமயம் அதன் வளர்ச்சிக்காகப் பல ஊர்களுக்குச் சென்று சந்தா தார்களைச் சேர்த்தவர் அவர். 1938-முதல் அவர், தம் நிறுவன வெளியீடுகளின் மூலம் எங்களைப் போன்ற தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்பு நூல்களை மலிவுவிலையில், நல்லதாளில் அச்சிட்டுப் பிர சுரித்ததால்தான் எங்கள் பெயர்கள் தமிழர்களுக்கு அறிமுக மாயின. இதற்காக அந்தப் பெரியவருக்கு நாங்கள் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம். விருந்தோம்பும் அவரது அரிய பண்பை வெறும் வாய்ச் சொல்லால் பாராட்டினால் போதாது; மனமார நினைவு கூர்ந்தே யாகவேண்டும். அமரர் குப்புசாமி ஐயர் தொடங்கி வைத்த வெளியீட்டுப் பணியை இன்றும் பேரார்வத்துடன் நடத்தி எங்களுக்கு ஊக்கம் அளித்து வருபவர் அவருடைய புதல்வர் கே. வேங்கடசுப்பிரமணியமும், பேரரும் இளைஞர் திலகமுமான திரு. பூரீநிவாஸனுமே ஆவர். இவர்கள் நற்பணி சிறக்கவேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

135||136—A-2, (Easwari Flats) M. K. Amman Koil Street, த. கா. சேனாபதி Mylapore, Madras - 4. 31–12–1990