பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னித்து மீண்டுமந்த மாமணியைத் தந்து விடு Iஅமரர் கி வா.ஜ. 1901 - 1988) திருமதி செளந்தரா கைலாசம் இயற்றியது

திசையெட்டும் புகழ்பரப்பித் திகழ்ந்திருந்த

- செந்தமிழ்த்தாய் அசைவின்றி இருட்டறைக்குள் அடங்கிக் கிடந்ததையும் புனலுக்கும் நெருப்புக்கும் பூமிக்கும் புழுவிற்கும் - தினம் உண்ணும் சுவைமிக்க தீனியாய் இருந்ததையும் , கண்ணுற்று நெஞ்சம் கலங்கி மிகத்தவித்து வண்ணத் தமிழிங்கு வாழத்தான்.வேண்டும்’ எனும் எண்ணக் கதிர் வீசி எழுந்துவந்த செங்கதிர்போல் அண்ணல் சுவாமிநாத அய்யர் அவர் வந்தார்; அல்லும் பகலும் அயராத நல்உழைப்பால், செல்லுக் கிரையான தீந்தமிழைக் காப்பாற்றிப் பார்முழுதும் ஆயிரமாய்ப் பயனை நிறைத்தபடி ஊர்கோலம் போகவைத்த உ.வே.சா. போலிந்த மண்ணுக்கும் தாய்மொழிக்கும் மங்காத தொண்டுசெய்த புண்ணியரைப் பார்ப்பதிந்தப் புவியில் மிகஅரிது ! அத்தகைய உ.வே.சா., அகம் கவர்ந்த மாணவராய் நித்தம் அருகிருந்த நிறைமனிதர் கி.வா.ஜ. வாய்த்தபெரும் பேற்றைவர மென்றுளம் கருதித் - தாய்த்தமிழை நன்கறியும் தலைமைபெற்ற செல்வரவர் ! அருந்தமிழின் இலக்கியங்கள் ஆசான் பதிப்பதற்குப் - பெருந்துணையாய் எப்பொழுதும் பின்னிருந்த - நல்லறிஞர் 1