பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

ஆய கலைகள் அனைத்துக்கும் பிறப்பிடமாங் நேயமுடன் இவ்வுலகு நிதம்போற்றும் கலைமகட் கே ஆசிரியர் என்னுமோர் அரும்பதவி தாங்கியவர் ! நேசம் சுரக்குமொரு நெஞ்சத்தால் ஓங்கியவர், ! மாசுடைய செயலேதும் மனத்திலெண்ணக் கூசியவர் 1 பேசுகிற நல்லுரையில் பிறங்குமொளி வீசியவர் ! எழுதுகிற எழுத்தினிலே இன்சுவையை வழங்கியவர் 1 பழுதுபடா வகைடிலகம் பயனடைய முழங்கியவர் 1 உடலில் கதராடை உள்ளத்தில் நம்தேயம் ! படர்ந்த திருதுதலில் பளிச்சென்னும் வெண்ணிறு ! பழமை ஒளியதனைப் பாய்ச்சும் தனிப்பாங்கு ! விழைந்து புதுமையினை விதைக்குமொரு பேராற்றல்!-- இவற்றைத் தனதுரிமை எனக்கொண்டு வாழ்க்கையெனும் சுவரில் சுடர்காட்டும் ஒவியத்தைத் தீட்டியவர் 1 சாந்த மலைபோலே கவினுலகை ஈர்த்திருந்த காந்த மலை என்னும் தனிப்பெருமை ஏந்தியவர் ! வள்ளல் திருமுருகன் மலரடியின் நிழலுக்கே உள்ளம் பறிகொடுத்த ஒப்பற்ற மாமனிதர் வான்கதிராம் உ.வே.சா. வழங்கியநல் ஒளிவாங்கித் தேனொளியாய் மண்முற்றும் தெளித்தமதி கி.வா.ஜ ! வண்ணச் சிறுபறவை வாகாய்ச் சிறகெடுத்து விண்ணில் பறப்பதற்கு விரைந்தோடிப் போவதுபோல் இன்றைக்கு நம்மை விட்டு, எங்கோ அவர்பறந்தார், துன்பச் சுமையை நாம் தூக்குதற்கு வைத்தபின்னர். தாங்கும் திறனற்றுத் தடுமாறிப் பூதலமே ஏங்கி அழுவதனை இறைவாநீ காண்கிலையோ ? என்ன பிழை செய்துவிட்டோம் ? ஏன்செய்தாய்

- - “. . - இக்கொடுமை ? மன்னித்து மீண்டுமந்த மாமணியைத் தந்துவிடு ! -

நன்றி : கலைமகள்