பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 > - நாம் அறிந்த கி.வா.ஜ;

சுவாமிகளிடமும் சொல்லுங்கள். இதில் அவர்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால், நாங்களே உங்களை பூரீலg ஞானியார் சுவாமிகளிடம் அனுப்பிவைக்க முயலு கிறோம் என்று தெரிவித்தார்கள். х

தம்முடைய விருப்பத்திற்கு மாறாகச் சேந்தமங்கலம் ஜமீன்தாரோ, கிச்சு உடையாரோ எதுவும் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவருக்கு உண்டு. அவர் களிடம் சென்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.

இந்த யோசனைக்கு அவர்கள் இனங்கவில்லை. அது இவருக்கு ஒரு பெரிய ஏமாற்றமே. அப்போதைக்குத் தம் ஆசையை இவர் தாமே கட்டுப்படுத்திக்கொள்ள நேரிட்டது. -- -

மேற்கொண்டு அந்த நேரம் ஜமீன்தாரை வற்புறுத்து வது உசிதமாக இவருக்குத் தோன்றவில்லை. காரணம், அவர் அப்போது வேறு ஒரு கவலையில் ஆழ்ந்திருந்தார்.

வரவேற்புக் கவிதை எழுதியது -

சேந்தமங்கலத்தில் எப்போதும் கொஞ்சம் தண்ணீர்த் தட்டுப்பாடு உண்டு. வீட்டுக் கிணறுகளில் கூட, பத்துப் பன்னிரண்டடி கீழே இறங்கித்தான் தண்ணிர் முகந்து வர வேண்டும். -

அந்த ஊரில் ஒரு குளம் உண்டு. அதற்குத் தண்ணீர் விட வேண்டுமென்றால் நாமக்கல் ஜமீன்தார் ரெட்டியார் அதற்கு இண்ங்கவேண்டும். அவரை எப்படி இணங்க வைப்பது என ஜமீன்தார் ஐராவத உடையார் யோசித்துக் கொண்டிருந்தார். -

முடிவில், ஒரு விழா ஏற்பாடாயிற்று அதற்கு நாமக்கல் ஜமீன்தாரை வரவழைத்தார்கள். х இவர் நாமக்கல் ஜமீன்தார் ரெட்டியாருக்கு ஒரு வரவேற்பு வாசித்தளித்தார். அந்த வரவேற்புக் கவிதை