பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - - & 0

பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்றாகப் படித்த யாரிடமேனும் தாமும் அவற்றை முழுமையாகக் கற்க வேண்டுமென்ற ஆசை இவரது உள்ளத்தில் மூண்டது. -

ஒரு சமயம் திருப்பாதிரிப்புலியூர் ரீலயூரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஒரு விழாவுக்குச் சேந்தமங்கலம் வந்திருந்தார்.

அவர் வடமொழி, தென்மொழிகளில் நல்ல புலமை வாய்ந்தவர். கடல் மடை திறந்ததுபோல மணிக்கணக் காகக் கேட்போர் சிறிதும் சலிப்படையாவண்ணம் பிரசங்கம் செய்வார்,

அவருடைய சொற்பொழிவுகளால் தமிழினிமையை நுகரும் ஆசை பெற்றவர்களும், சைவ சீலத்தை மேற் கொண்டவர்களும், பாதகச் செயல்களிலிருந்து நீங்கினவர் களும் பலப்பல பேர் உண்டு. -

அவரை யாவரும் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் என்றே அழைப்பர். பழந்தமிழ் இலக்கண இலக்கியத்தைப் பலர் இந்த ஞானியார் சுவாமிகளிடம் முறையாகப் பயின்று வருகிறார்கள்’ என்பதை இவர் தெரிந்துகொண்டார். சுவாமிகள் என்று யார் வந்தாலும் அவரைப் போய்ப் பார்ப்பதும் இவரது இயல்பாயிற்றே! அந்த விழாவிற்கு இவர் சென்றிருந்தார். -

அவரை நேரில் பார்த்த பின்பு, அவருடைய பேச்சைக் கேட்ட பின்பு முருகன் திருவருளால்தான் இத்தகைய தோர் அரிய வாய்ப்புத் தமக்குக் கிடைத்துள்ளதாக இவர் மகிழ்ந்தார். + - -

பூரீலது ஞானியார் சுவாமிகளிடம் சென்று முறை யாகத் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் கரைகடந்து விட்டது.

இவருடைய நண்பர்களில் சிலர், நீங்கள் முதலில் ஜமீன்தார் ஐராவத உடையாரிடம் சொல்லுங்கள்: கிச்சு