பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 . தாம் அறிந்த கி.வா.ஜ.

நூலையும் வாங்கிப் போய்ப் படித்தார்; தாமே அந்நூலுக்கு ஒரு சிறப்புப் பாயிரமும் எழுதித் தந்தார்.

காவிரி காவிரி கவினுறச் செல்லும் தாவெழில் மிக்க மோகையின் மறைபயில் கோசிக மரபினன் வாசுதேவற்குப் பேசிடும் குமரனாய் வந்தவ தரித்தோன் பாவெழிற் பயிலும் பான்மை அனைத்தியல் ஒதா துணர்ந்த உறுகல மிக்கோன் குகன்றிரு வடிக்கே அகம்படித் தொண்டன் சகம்புகழ் திருவளர் சீர்த்திச் . சகநாத னெனும் தகைமை யோனே என, ‘வேலூர் இந்து பாடசாலைத் தமிழாசிரியர் திரு ச.கு. கணபதி ஐயர் அவர்கள் வழங்கிய சிறப்புப் பாயிரம் என எழுதிக், கையொப்பமிட்டுக் கொடுத்தார். தமிழ் இலக்கியத்தில் பேரார்வம்

- (அன்பர் கி.வா.ஜ-வின் நண்பர்கள் திரும்பத் திரும்ப இவருடைய கவிதைகளைப் படித்து இவரைப் பெரிதும் பாராட்டினார்கள். இவருக்கு என்னவோ கண்ணில் தூசி விழுந்தாற்போல, ஒரு மன உறுத்தல் உண்டாயிற்று. -

‘தமிழாசிரியர் கணபதி ஐயர் நன்றாகப் படித் திருக்கிறார். கவிதை எழுதுகிறார். நாம் எதையும் முறை யாகப் படிக்கவில்லை. ஒதாது உணர்ந்து கவிதை எழுதி னாலும், அதில் ஏதேனும் இலக்கணப் பிழை இருக்கிறதா இல்லையா என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிய வில்லை. இலக்கண இலக்கியங்களை முறையாகப் படிக்காதவன் எனத் தெரிந்துதான் சிற்றிலக்கண நூல் ஒன்றை நமக்கு வழங்கினாரோ?’ எனத் தம்முள்’ நினைந்து வெட்கப்படலானார். - . . . - - -