பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 7s

அதை இவருடைய நண்பர் ஒருவர் இவரிடம் வந்து சொன்னார். உடன் இவர் தமிழ்ப் பண்டிதர் கணபதி ஐயரைப் போய்ப் பார்த்தார். - l

அவர் இவரிடம் சில பல விவரங்களைக் கேட்டார். இவர் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயிலாதவர் என்பதைத் தெரிந்துகொண்டார். உடனே தம்மிடமிருந்த சிற்றிலக்கணம்-சொற்றொடர் ஆக்கம்” என்னும் சிறிய புத்தகத்தை எடுத்து, அதில் ஒரு குறள் வெண்பாவை எழுதி, தம் அன்பளிப்பாக இவரிடம் கொடுத்தார். - -

இவர் அதை வாங்கிக்கொண்டார். அவர் எழுதி பிருந்த பாடலைப் படித்துவிட்டு, பதிலுக்குத் தாமும் ஒரு வெண்பா எழுதி அவரிடம் கொடுத்தார்:

பள்ளிச் சிறார் பயிலும் பாங்காய் இலக்கணத்தைக் கொள்ளத் தகுவ(து) என்று கூர்ந்தளித்தான்

- - கொள்ளையொடு நற்கணபதிக்குகிகர் அன்பே கிறைந்த - . சுவைச்சொல் கணபதி ஈங்கு. (கூர்ந்து-அன்புகூர்ந்து கொள்ளையொடு-மிகுதியான அன்போடு.) • * , -

அதைக் கண்டவுடன் கணபதி ஐயருக்கு மிகவும் வியப்பு உண்டாகிவிட்டது. “இந்த வட்டாரத்தில் உன்னைப் பலரும் புகழ்ந்து கூறுவது நியாயந்தான்: முருகன் திருவருளால்தான் நீ இத்தகைய கவியாற்றலைப் பெற்றிருக்கிறாய்’ எனப் பாராட்டினார், . . . . .”

வேறு பாடல்கள் எவையேனும் பாடியிருக்கி றாயா?’ என்று கேட்டார் கணபதி ஐயர். . . .

காந்த மலை ஆண்டவன்மேல் ஏற்கனவே பதிற்றுப் பத்தந்தாதி ப்ாடியிருப்பதாகச் சொன்னார் இவர். -

கணபதி ஐயருக்குப் பின்னும் வியப்பு அதிக மாயிற்று. இவருடன் இவர் இருக்குமிடம் வந்து, அந்த