பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

女77 நாம் அறிந்த கி.வா.ஜ.

அந்தப் பத்திரிகைக்கு அனுப்புவார். அவை வெளியான போது தம் நண்பர்களிடமும், பூஜ்யர் த்ரோவர் துரை யிடமும் தாமே கொண்டுபோய்க் காட்டுவார். - பூஜ்யர் த்ரோவருக்கு இ வ. ைர மிகவும் பிடித்து விட்டது. இவர் சொல்லித் தரும் முறை மிக விளக்கமாக இருக்கிறது என அடிக்கடி பாராட்டுவார். -

அமிழ் தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்

என்ற திருக்குறளுக்கு இவர் ஒரு நாள் விளக்கம் சொன்ன

போது மிகவும் மகிழ்ந்து போனார் துரையவர்கள்.

அப்போது அவர்களுக்குக் குழந்தையில்லை; எவ்வளவு

அருமையான பாட்டு!” என உணர்ச்சியோடு சொன்னார் துரையவர்கள்

உங்களிடம் பாடம் கேட்பதை வைத்துக்கொண்டு திருக்குறளுக்கு நானே ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பை எழுதிவிடலாம்’ என அவர் சொன்னபோது இவர் மிகவும் பூரிப்படைந்தார். . . . . .

ச. கு. க-வின் சிறப்புப் பாயிரம்

மோகனூருக்குப் பத்துக் கல் தொலைவில் (சேலம் மாவட்டத்து) வேலூர் என்கிற ஊர் இருக்கிறது. அந்த வேலூர் இந்து பாடசாலையில் தமிழ் ஆசிரியராகப் பணி யாற்றிக்கொண்டிருந்தார், ச.கு. கணபதி ஐயர். அவர் ஒரு சமயம் சேந்தமங்கலம் வந்தார். சேந்தமங்கலம் அவருடைய தாய்வழிப் பாட்டனாரின் ஊர்

அவரிடம் சிலர் இவரைப்பற்றிப் பெருமையாகச் சொன்னபோது, “அப்படியா? அந்த இளைஞரை நான் பார்க்க வேண்டுமே!’ என்றாராம்.

  • பிற்காலத்தில் அவர் சில ஆண்டுகள் ੋਨਾਂ . பத்திரிகையில் பணியாற்றினார். .