பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 76。

பெரும்பாலும் இவர் சட்டை போடாமல் இருந்த காலம் அது. ‘பூஜ்யர் த்ரோவர் துரையைப் பார்க்கப் போகும்போது சட்டை போட்டுக் கொண்டு போங்கள்’ என நண்பர்கள் வற்புறுத்தினார்கள், முதன்முதலாக அப்போதுதான் இவர் கதர் ஜிப்பா ஒன்று தைத்துக் கொண்டார். -

குறிப்பிட்ட நாளன்று இவர் எஸ். பி. மிஷன் போய்ப் பார்த்தார். இவரைக் கண்டதும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. -

“எங்கள் கிறிஸ்துவ சபையின் பரீட்சைக்காக நாங்கள் தி ரூ க் கு ற ைள ப் படிக்கவேண்டும். நீங்கள் சொல்வித் தர முடியுமா?’ என்று கேட்டார் துரையவர்கள். . . . -

இவர் அதற்கு ஒப்புக்கொண்டார். வாரத்திற்கு, நான்கு நாட்கள் சொல்லித் தரவேண்டும் என்றும், அவர்கள் .ெ வ ளி யூர் போகும்போது வரவேண்டா மென்றும் கூறி, மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளம் தரவும் அவர்கள் சம்மதித்தார்கள். - -

இதன்படி மறு நாள்முதல் அவர்களுக்கு இவர் தமிழ் சொல்லித் தரத் தொடங்கினார். முதலில் அ ந் த ப் பாதிரியாரின் மனைவிக்குப் பாடம் சொல்வார். பின்பு பாதிரியாருக்குத் திருக்குறள் பாடம் நடத்துவார். வீட்டிற்குத் திரும்பி வரும்போது மதகுரு த ம க் கு வந்துகொண்டிருந்த ஆங்கிலத் தினசரிப் பத்திரிகையை இவரிடம் படிப்பதற்குக் கொடுத்தனுப்புவார்.

பெரும்பாலும் தமிழ்ப் பத்திரிகைகளையே படித்துக் கொண்டிருந்த இவருக்கு ஆங்கிலப் பத்திரிகையைப் படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதனால் ஆங்கிலத்தில் எழுதிப் பழக வேண்டுமென்ற ஆசையும் எழுந்தது.

உள்ளுர் நி ரு ப் ர் போல், சேந்தமங்கலம்பற்றிய செய்திகளை அவ்வப்போது ஆங்கிலத்தில் இவரே எழுதி