பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 - நாம் அறிந்த கி.வா.ஜ.

ஏற்பட்ட அதிர்ச்சி, அலைச்சல் காரணமாக நிறை மாதம் ஆவதற்குள்ளேயே இவருடைய தாயாருக்குப் பிரசவம் ஆகிவிட்டது. இதனால் அவரது உயிருக்கே ஆபத், தாயிற்று. தம் மூத்த மகனைப் பார்க்க அவர் விரும்பி னார். அதனால் மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தியே அவசரம் அவசரமாகச் சேந்தமங்கலம் வந்து, தம்முடன் இவரையும், இவருடைய பெரிய பாட்டியையும் மோக லூர் அழைத்துப் போயிருந்தார். இவர் சில நாட்கள் அப்போது மோகனூரிலேயே தங்க நேரிட்டது. இவர் அங்கே போன வேளை தாயாரும், தம்பியும் உயிர் பிழைத்துக்கொண்டார்கள். - -

இதுவும் நல்ல காலம் முருகன் திருவருள் என மகிழ்ந்து மோகனூரிலேயே தம் பெரியபாட்டியை விட்டு விட்டுவிட்டுத் தனியே சேந்தமங்கலம் திரும்பினார்.

இவர் திரும்பி வந்ததை அறிந்தவுடன் கிறிஸ்துவ சபையிலிருந்து அந்த ஆள் மீண்டும் வந்தார்,

எங்கள் ம்தகுருவும், அவருடைய மனைவியும் தங்களிடம் தமிழ் கற்க விரும்புகிறார்கள். இது சம்பந்த மாகத் தங்களைப் பார்க்க வேண்டுமாம். தாங்கள் வர வேண்டும்’ என்று சொன்னார்.

இரண்டு நாட்கள் கழித்து வருவதாக இவர் அவரிடம் சொல்லி அனுப்பினார்: ஊரிலிருந்து வந்த அசதி: “கிறிஸ்துவ சபைக்குப் போகலாமா?’ என்கிற தயக்கம்g மேலும் இதற்கு முன் ஆங்கிலேயர்களுடன் பழகியதும் இல்லை. - - - -

இவரைத் தமக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க ஓர் ஆங்கிலேயரே அழைக்கிறார் என்பதில் இவருடைய நண்பர்கள் பெருமை கொண்டார்கள். -

‘போங்கள்: போய் அவர்களுக்குத் தமிழ் சொல்லித் தாருங்கள்: சம்பளம் மாதம் 25 ரூபாய் கேளுங்கள், ! ஐந்து, பத்துக்கு ஒப்புக்கொள்ளாதீர்கள்’ என்றார் ஒரு நண்பர். - - -