பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭶ 8 நாம் அறிந்த கி.வா.ஜ.

தால், இவர் தம் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தார். இந்து புராணக் கதைகளைப் பற்றிய அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் பாடம் சொல்லி வந்தார். .

ஒரு நாள் இவர் சொல்லித் தந்துகொண்டிருந்த பாடத்தில் இவர் வழிபடும் முருகனைப்பற்றிக் குறைவாக எழுதப்பட்டிருந்த பகுதி வந்தது. -

“இவை எல்லாம் சுத்த அபத்தம் (These are sheer (nonsense) எனச் சொன்னதோடு அந்தப் புத்தகத் தையே மூடி வைத்துவிட்டு வந்துவிட்டார். அதுகாறும் அடங்கி இருந்த கோபமும் தாபமும் திடீரென வெளிப் பட்டுவிட்டன. - - . .

‘இனிமேல் உங்களுக்கு அந்த வேலை இல்லை’ என்று இவருடைய நண்பர் ஒருவர் சொன்னார்.

“முருகனைப்பற்றி இழிவாகச் சொல்லித் தரும் வேலை எனக்கும் வேண்டாம்” என இவரும் சொல்லி விட்டார். -

ஏதோ ஒரு .ே வ க த் தி ல் எதையும் சொல்லி விடுபவர்கள் பின்னால் ஏன் அப்படிச் சொன்னோம் என வருந்துவார்கள். அப்படி வருந்தும் நிலை இவருக்கு. ஏற்படவில்லை. -

இவர் சமயப் பற்றுள்ள இந்து என்றால், பூஜ்யர் த்ரோவரும் சமயப் பற்றுள்ள தூய கிறிஸ்துவராக இருந்தார். பாம்பின் கால் பாம்பு அறியாதா? .

அவரே அடுத்த நாள் இவரைக் கூப்பிட்டு அனுப்பினார். ஜகந்நாதன், நான் படி த் தால் போதுமா? பிறருக்குப் பாடம் சொல்லித் தரப் பழகவும் வேண்டாமா? கிறிஸ்துவ மத சம்பந்தமான புத்தகங். கள்ைமாத்திரம் என் மனைவிக்கு இனி நானே பாடம் சொல்லித் தருகிறேன். நீங்கள் வழக்கம்பேர்ல் வந்து