பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி &垒

எங்களுக்கு மற்றப் பாடங்களைச் சொல்லித் தர வேண்டும்; உங்களால் எத்தனையோ விஷயங்களை நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம். உங்களிடம் பாடம் கேட்கும் பாக்கியத்தை நாங்கள் இழக்கக் கூடாது’ என்று கேட்டுக் கொண்டார்.

பூஜ்யர் த்ரோவர் துரையினுடைய பெருந்தன்மை இவரை உவகைக் கடலில் ஆழ்த்தியது.

அவிரோத ஞானச் செல்வர்

ஒரு நாள் இவருடைய நண்பர்கள் சிலர் இவரைத் தேடி வந்தார்கள். -

“ எப்போதும் திருப்புகழ், அலங்காரம் என்றே பேசிக் கொண்டிருக்கிறீர்களே, இன்று எங்களுடன் வாருங்கள். உங்களை ஒ ரி ட த்தி ற் கு அழைத்துப் போகப் போகிறோம்’ எனக் கூப்பிட்டார்கள்.

“எங்கே போகிறோம்?’ என்று இவர் கேட்டார்.

போகும்போது பேசிக் கொண்டே போகலாம். கிளம்புங்கள்’ என இவரை அவர்கள் அவசரப் படுத்தின்ார்கள். இவர் அவர்களுடன் சென்றார்.

போகும் வழியில், ‘அன்றைக்கு நம் விழாவில் ஒரு பெண் வந்து பாடினாளே , பாட்டு எப்படி?” என்று ஒருவர் பேச்சை ஆரம்பித்தார்,

‘ஏன், அன்றைக்கு அவள் பாடி முடித்தவுடன் நான் தான் அவளது பாட்டையும், அவளையும் புகழ்ந்து பேசினேனே! பாட்டு நன்றாக இருந்தது’ என இவர்

சொன்னார். - - . .

எல்லோரும் சிரித்தார்கள். ‘அதனால் தான் அவள் இவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வரும்படி, நம்மை வற்புறுத்தினாளா?” என்று ஒன்றும் அறியாதவர்போல 怒 கேட்டார். . . . . . . . . . . -

ஒருவ o

  • ... •