உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 31 குமரன் :-- இதை யெல்லாம் போலீஸார் அவர்கள் நம்பவேண்டுமென்கிறீரா? இதோ வீடு இழந்தோர், வீதி யிலே நிற்போர்-விழிகளை குளமாக்கிக் கொண்டோர் இவர் களது கணக்குகளை எண்ணி ப்பார்க்கட்டும்! பிறகு சொல் லட்டும்.. பலாத்காரம், வெறிச் செயல் இவைகளுக்குப் பிறந்த ஏக புத்திரர்கள் யார் என்று? மலையப்பன் :-பார்த்தீர்கள லேயே பலாத்கார வாடை வீசுவதை. அவனது பாஷையி சப் இன்ஸ்:-குமரன் கிராமத்தின் அமைதியைக் கருதி உம்மை கைதி செய்கிறோம் ! குமரன் :- ஆ! மலையப்பன் :- என்னடா, கிறாய்! ஆச்சரியக்குறி போடு குமரன் :- ஆச்சரியக்குறி தான்! கொஞ்சம் வளைந் தால் கேள்விக் குறியாக மாறிவிடும்! கேள்விக் குறிக்கும் அரி வாளுக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை ! என்பது ஞாபகம் இருக்கட்டும். அரிவாள் என்றால் ஆளை வெட்டும் அறிவாள் அல்ல உமது அதிகாரத்தை, ஆணவத்தை, அறியாமை விருட்சத்தை வெட்டும் அறிவாள் ! இதைக் 'கேள்! அறிஞரின் பேனாவே ஒரு அறிவாள்! சப் இன்ஸ் :-குமரன்! நீர் குற்றமற்றவராக இருக்க லாம். ஆனால், ஜமீன்தார் தந்துள்ள சாட்சியங்களிலிருந்து உம்மை கைதி செய்ய வேண்டியிருக்கிறது. உண்மைகளை கோர்ட்டில் வந்து நிரூபித்துக் கொள்ளலாம். அது வரை யிலும் உம்மை பாதுகாப்பில் வைக்க நேரிடுகிறது. குமரன் கைது செய்யப்படுகிறான்) ஜனங்கள் எதிர்க்கின்றனர்) குமரன் :- தோழர்களே ! போலிஸார் அவர்களது கடமையைச் செய்கிறார்கள்! அவர்களுக்கு ஆத்திரத்தை