உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 காட்சி 40 32 32 சஞ்சீவி:-- மந்தமாகி விட்டது மக்கள் அறிவு ! மனித னுக்கும், மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது! இனி மலையப்பர் ஜமீன்தார் மட்டுமல்ல ! இந்த உலகத்தையே ஆளக் கூடியவர் ! மனிதனை கடவு ளாக்குகிறதும், கடவுளை மனிதனாக்குகிறதும் பிரச்சாரம் தான்! பூசாநி:-- எசமான்! மலையப்பன்:- என்ன பூசாரி ? பூசாரி:- என்மகன் ஒருத்தன் இருக்கான். பெயர் காளி பாபா ! வயது பத்து இருக்கும். சர்வ மூலிகை களுக்கும் பச்சிலை தர்றான்னா நல்ல வருமானம் இருக்கும். மலையப்பன்:- காளிபாபா! நம்புவாங்களா? ச்ஞ்சீவி :--அதான் சொன்னேனே! கடவுளை மனித னாக்குவதும், மனிதனை கடவுளாக்குவதும் பிரச்சாரம் தான் என்று. அண்ணாமலை:- அந்த வருமானத்திலேபாதி அம்பாள் கோவிலுக்கு, பாதி ஜமீன்தாருக்கு ! மலையப்பன்:-சரி ! அப்படியே செய் ! காட்சி 41 ("குமரன் வழக்கு தீர்ப்பு. குமரனின் வேகம் நிறைந்த ஆர்க் மெண்ட். தீர்ப்பை அறிய மக்கள் அவா") நீதிபதி:- இருதரப்பு வாதங்களைக் கொண்டும்-சாட்சி களையும் ஆராயும்போது குமரன் புரட்சிக்காரன், பலாத்கார வாதி, கடவுளை நிந்திப்பவன் என்று தெரியவில்லை. மக்களை படிக்கச் சொல்வது, ஏகமனதான கடவுளை கும்பிடுவது