பக்கம்:நாயகர் பெருமான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

நபிபெருமானுக்கு இந்த வன்முறைச் செயல் பிடிக்க வில்லை. ஹஸரத் அபூபக்கர் அவர்கள் கூறிய அருள் வழியே ஒப்பத் தக்கதாயிருந்தது. எனவே, ஒவ்வொரு கைதியும், நாலாயிரம் திர்ஹம் கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறே பலர் பணம் கொடுத்து விடுதலையானார்கள். பணம் கொடுக்கும் வசதியற்ற படித்த மனிதர்கள் ஆளுக்குப் பத்துப் பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து விடுதலை பெறலாம் என்று ஒரு புது நிபந்தனை விதிக்கப்பட்டது. தாம் கல்லாதவரா யிருப்பினும், கல்வியின் அருமையை எவ்வளவு பெரிதாக மதித்தார்கள் பெருமானார் என்பதற்கு இது நல்ல சான்றாகும்.

பணவசதியும் இன்றிப் படிப்பறிவும் இன்றித் தம் நிலை யாதாமோ என்று கலங்கிய கைதிகளை அவர் களிடமிருந்து எதுவும் பெறாமலே விடுதலை செய்து விடுமாறு பெருமானவர்கள் கட்டளையிட்ட வண்ணம் அனைவரும் விடுதலை பெற்றார்கள்.

13. உள்ளந் தளராத வீரர்

ஹிஜிரி மூன்றாம் ஆண்டில் மதினாவில் இருந்த முஸ்லிம்களைத் தாக்குவதற்காக மக்காவாசிகள் ஆயத்தம் செய்தார்கள். ஒற்றர்கள் மூலமாக இச் செய்தியை அறிந்த பெருமானவர்கள் முஸ்லிம்களைப் போருக்கு ஆயத்தம் செய்தார்கள். அப்போது இஸ்லாத்திற்காகப் போராட நின்ற வீரர்கள் எழு நூறு பேர் தான்.