பக்கம்:நாயகர் பெருமான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

வயது முதிர்ந்து உடல் தளர்ந்த ஒரு முதியவர், மதினாவுக்குத் திரும்பிப்போக மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் இது: “நான் கப்ருக்குள் (புனித குழிக்குள்) காலைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறேன். (விரைவில் இறந்து விடுவேன்.) இந்த நிலையில் நபியவர்களைப் பாதுகாப்பதற்காகப் போர் செய்து இறப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார் அம் முதியவர்.

உண்மைப் பற்றுதலும் நம்பிக்கையும் உணர்ச்சியும் கொண்ட இந்தப் படை போரில் வெல்லும் என் பதில் ஐயம் உண்டோ ?

14. இணையற்ற வீரர் இப்னுநலர்

உஹத் சண்டையின் போது நிகழ்ந்தது இது. போர்க்களம் ஒரே குழப்பமாயிருந்தது. அவ்வளவு தீவிரமாகப் போர் நடந்து கொண்டிருந்தது. பெருமானவர்களைப்போல் முகச்சாயல் உடைய ஒருவரைக் கொன்று விட்டு, பெருமானைக் கொன்று விட்டதாக முழங்கினான் ஒரு குறைஷி.

இந்தக் கூக்குரலைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் பெரும் தளர்ச்சி யடைந்தார்கள். அவர்களுடைய ஊக்கம் குறைந்து விட்டது. ஆயினும் ஆற்றல் மிக்க வீரர்கள் சற்றும் தளர்ச்சியடையாமல் தொடர்ந்து எதிரிகளைச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். எதிரிப்