பக்கம்:நாயகர் பெருமான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தலைமையாக உள்ள அனைவரையும் வேடிக்கை பார்க்க அழைத்திருந்தான். அப்படிக் கூடிய தலைவர்களிலே, அபூஸுபியான் என்பவரும் ஒருவர்.

கொலை செய்வதத்குச் சிறிது நேரம் இருக்கும் போது, அந்த அபூஸுபியான் ஸைதை நோக்கி. “ஸைத் இப்போது, உமக்குப் பதிலாக முஹம்மதை வெட்டுவதாக இருந்தால், அது உம் அதிர்ஷ்டந்தானே!” என்று கேட்டார்.

“நபிபெருமான் அவர்களின் பாதத்தில் முள் தைப்பதால் என் உயிர் தப்பும் என்று அறிந்தாலும் அதை நான் வரவேற்க மாட்டேன். அவர் காலில் முள் குத்துவதைக் காட்டிலும் என் உயிரை இழப்பதே பெரும் பேறென நினைக்கிறேன். ஆகவே, என்னை வெட்டிக் கொல்லுங்கள். நான் அஞ்சவில்லை. ஆண்டவன் மீது சத்தியம்!” என்று கூறினார் ஸைத்.

“முஹம்மதைச் சேர்ந்தவர்கள் அவரை எவ்வளவு அன்புடன் கொண்டாடுகிறார்களோ, அவ்வளவு அன்புடன் வேறு யாரையும் கொண்டாடு வதில்லை’ என்று அபூஸுபியான் கூறினார்.

அதன் பின் சிறிதும் இரக்கம் காட்டாமல் ஸைத்தை வெட்டிக் கொன்று விட்டார்கள்.