பக்கம்:நாயகர் பெருமான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தாமாகவே வந்து பெருமானின் ஆசியைப் பெற்று இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டார்கள்.

23. பெருமான் இருப்பதே பெரிது

ஹுனைன் சண்டையில் பல கைதிகள் பிடி பட்டார்கள். ஏராளமான பொருள்களும் கிடைத்தன. பிடி பட்டவர்களை மீட்டுக் கொண்டு போக அவர்களின் உறவினர்கள் வரக் கூடும் என்று சில நாட்கள் வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் வராது போகவே, பெருமானவர்கள் கைதிகளையும் பொருள் களையும் முஸ்லிம் படை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

முதலில் ஐந்தில் ஒரு பங்கு பொருள் பொது நிதிக்காகவும், ஏழைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டது. மீந்தவற்றையே படைவீரர்களுக்குப் பங்கிட்டளித்தார்கள். அவ்வாறு பங்கிட்ட போது புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்த மக்காவாசிகளுக்கு மற்றவர்களுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் சிறிது அதிகமாகவே பங்குப் பொருள் கொடுத்தார்கள்.

அன்சாரி இனத்தைச் சேர்ந்த இளைஞர் சிலருக்கு இந்த நிகழ்ச்சி சிறிது மனக் கசப்பை யளித்தது. அவர்கள் தங்களுக்குள் பலவாறாய்ப் பேசி மனம் சலித்துக் கொண்டார்கள். இச் செய்தி பெருமானவர்கள் காதுக்கு எட்டியது. அவர்கள் அன்சாரி இனத்தவர்களை அழைத்துக் கேட்டார்கள்.