பக்கம்:நாயகர் பெருமான்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

சேர்த்துக் கொண்டு கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டார்கள். ஓர் ஆண்டுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்திருந்ததால், முற்று கையைப் பற்றிக் கவலைப் படாமல் அவர்கள் கோட்டைக்குள்ளே நெடுநாட்கள் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போருக்கு வருவதாகத் தெரியாது போகவே, பெருமான் அவர்கள் நௌபல் என்ற பெரியவருடன் சேர்ந்து ஆலோசித்து, முற்றுகையைக் கைவிட்டுத் திரும்ப முடிவு செய்தார்கள்.

அவ்வாறு திரும்பும் போது, முஸ்லிம்களில் சிலர், பெருமானை அணுகி, அந்தக் கூட்டத்தாரைச் சபிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அதே தாயிப்பில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பெருமான் அவர்கள் இஸ்லாமிய நன்மார்க்கம் பற்றி விளக்கிப் பேசிக் கொண்டிருந்த போது, தாயிப் வாசிகள் பெருமான் அவர்கள் மீது கற்களை வீசிப் பலமான காயம் உண்டு பண்ணி விட்டார்கள். இரத்தக் காயம் ஏற்படுத்திய அத்தீயவர்களைக் சபிக்கும்படி முஸ்லிம்கள் ஒரு முகமாகப் பெருமானை வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால் பெருமானவர்கள் அவர்களைச் சபிக்க வில்லை. இறைவனை நோக்கி, “ஆண்டவனே, தக்கீப் கூட்டத்தாருக்கு நல்லற வழியைக் காட்டு. என்னிடம் அவர்களை வரும்படி செய்.” என்று வேண்டிக் கொண்டார்கள்.

அவர்களுடைய வேண்டுகோள் நிறைவேறியது. சிறிது காலத்திற்குப் பின்னர் அதே தக்கீப் கூட்டத்தார்