பக்கம்:நாயகர் பெருமான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உடனே அவரைக் கொல்ல வேண்டும் என்று கூடியிருந்த முஸ்லிம்கள் துடித்தார்கள். பெருமானார் அவர்களை அமைதிப் படுத்தினார்.

“நான் இவரை மன்னித்து விட்டேன்” என்று பெருமானார் கூறினார்.

அப்போதே அப் பெருமானைப் போற்றி ஒரு பாடல் பாடினார். அரபி மொழியில் உள்ள அழகான இசைப் பாடல்கள் பலவற்றிலே அது மேன்மை பெற்று விளங்குகிறது.

இப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த நபிகள் நாயகம் தமது மேலாடையை எடுத்து அக்கவிஞருக்குப் பரிசளித்தார்கள். அக்கவிஞரின் குடும்பத்தார் வழிவழியாக அம்மேலாடையை ஒரு புனிதப் பொருளாகக் காப்பாற்றிவந்தார்கள். பிற்காலத்தில் அம்மேலாடை நாற்பதினாயிரம் திர்ஹ முக்கு விலையாயிற்று. இப்போது அம்மேலாடை கான்ஸ்டாண்டிநோபிலில் புனிதப் பொருளாகப் பாதுகாத்து வைக்கப் பெற்றுள்ளது.

27. பாவிக்காகச் செய்த பிரார்த்தனை

முஸ்லிம்களிலே முனாபிக்கீன்கள் என்று ஒரு கூட்டத்தார் இருந்தார்கள். முனாபிக்கீன்கள் என்றால் வஞ்சகர்கள் என்று பொருள். இவர்கள் இஸ்லாத்திலே சேர்ந்து கொண்டு உள்ளுக்குள் இருந்தபடியே இஸ்லாத்திற்குத் தீங்கு செய்து கொண்-