பக்கம்:நாயகர் பெருமான்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அவர்கள் பிறந்து வந்த நாள் ரபியுல் அவ்வல் மாதம் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை யாகும்.

நபிநாயக மவர்கள் பிறக்கு முன்னே அவருடைய தந்தையார் அவர்கள், வாணிபம் செய்வதற்காக ஷாம் நாடு சென்று திரும்பி வரும் வழியில் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்கள்.

பெருமானாருடைய தாயாரவர்களும் அவர்களுக்கு வயது ஆறு ஆகும் போது, வெளியூர் சென்றிருந்த போது காலமாகி விட்டார்கள்.

எனவே, இறைவனின் திருத்தூதரவர்கள் இளமைப் பருவத்தில் அவர்களுடைய பாட்டனாராகிய அப்துல் முத்தலிப் அவர்களின் ஆதரவில் வளர்ந்து வர வேண்டியவர் ஆனார்கள்.

அப்துல் முத்தலிப் அவர்கள் மிக்க அன்போடு தம் பேரரை வளர்த்து வந்தார்கள்.

2. தேர்ந்தெடுத்த சிற்றப்பா

தாயும் தந்தையுமற்ற நிலையில் பெருமானவர்கள், தம் பாட்டனாராகிய அப்துல் முத்தலிப் அவர்களிடம் வளர்ந்து வந்தார்கள். அப்துல் முத்தலிப் அவர்கள் மூப்படைந்து வந்ததால் நாளுக்கு நாள் அவர்களுடைய உடல் நிலை தளர்ந்து வந்தது. எனவே, அநாதைக் குழந்தையாகிய பெருமான் அவர்கள் தக்க