பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நாயன்மார் கதை

இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் தழுவிக் கொண் டனர். இருவரும் வேறுபாடு நீங்கி உளம் கலந்த அன் புடையவராகித் திருப்புன்கூர் சென்று இறைவனே வணங்கினர்கள்.

30. திரு மூல நாயனர்

திருக்கைலாயத்தில் கந்தியெம்பெருமானுடைய உப தேசம் பெற்ற சித்தர்கள் பலர் உண்டு. அவருள் ஒருவர், பொதியில் மலையில் இருந்த அகத்திய முனிவரைப் பார்த்து அவருடன் சிலகாலம் இருந்துவிட்டு வரலாம் என்ற எண் னத்தால் புறப்பட்டார். செல்லும் வழியில் திருக்கேதா ரத்தை வழிபட்டு, நேபாளத்தில் எழுந்தருளி யிருக்கும் பசுபதிசுவரரை வணங்கி, கங்கைக் கரைக்கு வந்தார். அவ் வாற்றில் நீராடிக் காசி விசுவேசரைத் தரிசித்துக் கொண்டு பூரீசைலத்துக்கு வந்து இறைவனேப் போற்றித் திருக்காளத் திக்குச் சென்று காளத்தியப்பனைத் தொழுது தென்றிசை நோக்கி வந்தார். .

திருவாலங்காடு, காஞ்சிபுரம் என்னும் தலங்களைத் தரிசித்துக் காஞ்சியில் இருந்த யோகியர்களுடன் அள வளாவிச் சில நாள் தங்கினர். அப்பால் திருவதிகையை வழிபட்டு விட்டுத் தில்லேயை அடைந்தார். நடராசப் பெரு மானேக் கும்பிட்டுத் தெவிட்டாத இன்பம் பெற்று அங்கே சில நாள் வைகினர். பின் காவிரிக் கரையை அடைந்து திருவாவடுதுறையை கண்ணினர். அங்கே ஆலயத்துக்குச் சென்று எம் பெருமான வணங்கிய பொழுது, அங்கேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தே எழுந்தது. எழுந்தாலும் மீண்டும் பயணங் தொடங்கிப் புறப்பட்டுச் செல்கையில் அவ்வூர்க் காவிரிக்கரையில் பல பசுக்கள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/10&oldid=585643" இலிருந்து மீள்விக்கப்பட்டது