பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு மூல நாயனுர் 5

அருகில் அந்தணர்கள் வாழ்கின்ற சாத்தனூரிலிருந்த மூலன் என்னும் பெயருடைய ஆயன் அந்தப் பசுக்களே அங்கே அழைத்து வந்து மேய்ப்பது வழக்கம். அன்றும் மேய்க்கும் போது அவனுடைய வாழ்நாளுக்கு இறுதி வந்து எய்தியமையின் உயிர் நீங்கின்ை. அவன் உடலம் கீழே கிடக்க, ஆவினங்கள் அந்த உடலைச் சுற்றிச் சுற்றி வந்து காவால் வருடின; மோந்து பார்த்தன; கண்ணிர்விட் டுப் பெருமூச் செறிந்தன.

இந்தக் காட்சியைக் கண்ட சித்தர் திருவுள்ளம் இரங்கி, இந்தப் பசுக்களின் துயரத்தை நீக்கும் வழி யாது என்று யோசித்தார். மீட்டும் ஆயன் உயிர்பெற்று எழுக் தாலன்றிப் பசுக்களின் துயரம் நீங்காதென்று தெரிந்து, தம்முடைய யோக ஆற்றலால் தம் உடலே ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு, ஆயன் உடலுக்குள் புகுந்து எழுந்தார்.

தம்மைப் பாதுகாப்பவன் எழுந்தவுடன் பசுக்கள் அவனே கக்கி மோந்து இன்புற்றுத் துள்ளிக் குதித்து மேயச் சென்றன. திருமூலர் அந்தப் பசுக்கள் மேயும் இடத்துக்குச் சென்று அவற்றை மேய்த்துப் பிறகு தண் ணிர் காட்டிப் பாதுகாத்தார். கதிரவன் மறைந்தவுடன் பசுக்கள் தம் கன்றை கினைத்துச் சாத்தனூரை நோக்கிப் புறப்பட்டன. திருமூலர் அவற்றின் பின்னே சென்ருர். ஒவ்வொரு மாடும் தன் தன் வீட்டில் புக, அவர் கின்ருர். ஆயனுடைய மனேவி, தன் கணவன் வர நேரமாகி விட்டது என்று அறிந்து காத்திருந்தாள். திருமூலரைக் கண்ட வுடன் அவள், “ஏன் இவ்வளவு நேரம்? உடம்புக்கு ஏதே னும் திங்குண்டோ?' என்று சொல்லி அவரைத் தொடச் சென்ருள். அவர் விலகி சிற்க, "ஏன் இப்படி இருக்கிறீர் கள்?' என்று அவள் கேட்டாள். 'எனக்கும் உனக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை" என்று திருமூலர் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/11&oldid=585644" இலிருந்து மீள்விக்கப்பட்டது