பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நாயன்மார் கதை

விட்டு, அவ்வூரில் உள்ள பொது மடத்துக்குச் சென்று யோகத்தில் இருக்கத் தொடங்கினர்.

இரவெல்லாம் துயிலாமல் வருத்தத்துடன் இருந்த ஆயனுடைய மனைவி, காலையில் திருமூலர் வேறுப்ாட்டோடு இருப்பதை ஊரவருக்கு உரைத்தாள். அவர்கள் சென்று மடத்தில் யோகநிலையில் அமர்ந்திருந்தவரைக் கண்டு வியக் தார்கள். "இவருக்குப் பித்துப் பிடிக்க வில்லை. வேறு ஒரு பெண்ணிடத்தில் வைத்த அன்பினுல் புறக்கணிக்கவில்லே, சித்த விகற்பம் நீங்கித் தெளிந்த சிவயோக விலையில் இருக் கிருர். பழைய விலைப்படி இனி உறவு முறை கொள்ள இயலாது' என்று அந்தப் பெண்ணிடம் கூறி வீட்டுக்கு அனுப்பினர்கள்.

திருமூலர் யோகு தெளிந்து பசுக்களுடன் திருவாவடு துறைக்குச் சென்ருர். மறைத்து வைத்திருந்த தம் உடலேப் பார்த்தபோது அதனை அங்கே காணவில்லை. திருமூலர் வாயிலாகச் சிவாகமப் பொருள் தமிழில் வெளிவர வேண் டும் என்பது சிவபெருமான் திருவுள்ளமாதலின் அவ் வுடம்பை மறைத்தருளின்ை. இதனை ஞானப்பார்வை யால் உணர்ந்த திருமூலர் திருவருளின் வழியே கடக்க எண்ணி, திருவாவடுதுறைக் கோயிலே அடைந்தார். அக் கோயிலில் உள்ள தல விருட்சமாகிய அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தலைப்பட்டார்.

யோக விலையில் இருந்த திருமூலர் ஓர் ஆண்டு யோகம் செய்து கண்விழிப்பார். ஒரு பாடல் பாடுவார். இப்படி ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திர மாலே என்ற அரிய நூலே அருளினர். மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்து, பிறகு இறைவன் திருவரு ளால் மீட்டும் திருக் கைலாயம் சென்று எம்பெருமானைப் பிரியாமல் உறையும் பெருவாழ்வு பெற்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/12&oldid=585645" இலிருந்து மீள்விக்கப்பட்டது