பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டியடிகள் நாயனுர் - 7

திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர மாலை திருமத்திரம் என்றும் வழங்கப் பெறும். அது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் கான்கைப் பற்றியும் சொல்லும் ஒன்பது தந்திரங்கள் அமைந்தது. சைவத் திரு முறைகள் பன்னிரண்டில் அது பத்தாங் திருமுறையாகச் சேர்க்கப் பெற்றிருக்கிறது.

31. தண்டியடிகள் நாயனர்

திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே வழிபடுதற்கு உரியவர்கள். அதனல்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று பாடினர். அத்தகைய பேறு பெற்றவர்களுள் ஒருவர் தண்டியடிகள் நாயனார். அவர் புறக்கண் இல்லாத குருடர். ஆயினும் அகக் கண்ணில் எப்போதும் இறைவன் திருவடியைக் கண்டு இன்புறும் இயல்பு பெற்றிருந்தார். நாள்தோறும் ஆரூர் எம்பெருமான வணங்கிப் பஞ்சாட் சரத்தைச் செபித்துக் கொண்டே சென்று வருவார்.

கோயிலின் மேற்கே உள்ள குளத்தைச் சுற்றிலும் அக்காலத்தில் சமணர்கள் மடங்களைக் கட்டிக்கொண்டார் கள். வரவரக் குளத்தின் அளவு குறுகிக்கொண்டே வர் தது. அதனை அறிந்த தண்டியடிகள் காயனர், "இந்தக் திருக்குளத்தை அகழ்ந்து பெருகச் செய்ய வேண்டும்' என்று முடிவு பண்ணி, அதற்கு ஆவனவற்றைச் செய்யத் தொடங்கினர். அங்கங்கே அடையாள முளே கட்டுக் கயிறு கட்டி நடு இடத்தைக் கையாலே தடவிப் பார்த்து மண் வெட்டியால் வெட்டி மண்ணைப் புறத்தே கொட்டி மறுபடியும் வெட்டுவார். இந்தத் தொண்டு செய்யும் போது திருவைந்தெழுத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/13&oldid=585646" இலிருந்து மீள்விக்கப்பட்டது