பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நாயன்மார் கதை

அவர் குளத்தின் அளவைப் பெருக்கும் பொருட்டுத் தோண்டுவதைக் கண்ட சமணர்களுக்கு அவர் செயல் பொறுக்கவில்லை. அவரை அணுகி, "மண்ணேத் தோண்டி ஞல் இங்குள்ள பிராணிகள் இறந்துபடும்; அவற்றைத் துன்புறுத்த வேண்டாம்” என்ருர்கள். א:

அது கேட்ட தண்டியடிகள், "உண்மை அறியாதவர் களே திருநீற்றைச் சாக்தாகப் பூணும் எம்பெருமானுக்கு உரிய திருப்பணி அல்லவா இது? இது மிகச் சிறந்த அறம் என்பதை நீங்கள் அறிய முடியுமா?' என்ருர்.

அதனேக் கேட்ட சமணர், "நாங்கள் எடுத்துச் சொல் லும் தருமத்தை நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. காதை யும் இழந்தாயோ' என்று கேட்டனர். தண்டியடிகள், மந்தமான அறிவும் காணுத கண்ணும் கேளாத செவியும் உங்களுக்குத்தான் உள்ளன. நான் இறைவன் திருவடி களேயே காண்கின்றேன் அன்றி மற்றவற்றைக் காண்ப தில்லை. மற்றவர்களைப் போல நான் எல்லாப் பொருளேயும் காண வல்லேனளுல் நீங்கள் என்ன செய்வீர்கள்' என்று கேட்டார். f

அதைக் கேட்ட சமணர்கள், "உன்னுடைய கடவுள் அருளால் நீ கண் பெற்ருயானல் நாங்கள் இந்த ஊரில் இராமல் ஓடிப் போகிருேம்' என்று சொல்லி, அவர் கையில் இருந்த மண் வெட்டியைப் பறித்துக்கொண்டு, முளைகளையும் கயிற்றையும் எடுத்து எறிந்தார்கள்.

அதனே உணர்ந்த தண்டியடிகளுக்குக் கோபம் மூண் டது. அவர் எம்பெருமான் சக்கிதியில் வந்து வணங்கி, 'எம்பெருமானே, இன்று, சமணர்கள் என்னே அவமானம் செய்து விட்டார்களே! இந்தப் பழிதீர அருள வேண்டும்” என்று கைந்து அடி வீழ்ந்தார். பின்பு தம் திருமடத்துக் குச் சென்று இரவு காங்குகையில் இறைவன் எழுந்தருளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/14&oldid=585647" இலிருந்து மீள்விக்கப்பட்டது