பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டியடிகள் நாயனுர் 9

'நீ மனக் கவலையை ஒழி. உன் கண் திறக்கவும் சமணர் விழி மங்கவும் காணப் போகிருய். அஞ்ச வேண்டாம்” என்று அருளி மறைந்தான். அப்பால் அன்று இரவே அரசனுடைய கனவில் தோன்றி, "தண்டியடிகள் நமக்குக் குளங்தோண்டுவதைச் சமணர்கள் சகிக்காமல் இடையூறு செய்கிருர்கள். நீ அங்கே போய் அவன் கருத்தை கிறை வேற்று' என்று சொல்லி மறைந்தான்.

உடனே அரசன் எழுந்து தண்டியடிகள் காயனரிடம் சென்று பணிய, அவர் எல்லா நிகழ்ச்சிகளையும் எடுத்து உரைத்தார். சமணர் கூறியதையும், தான் கண் பெறு வதாகச் சொன்னதையும், அப்போது ஊரை விட்டே ஒடு கிருேமென்று அவர்கள் கூறியதையும் சொன்னர்.

அரசன் சமணர்களே அழைத்து விசாரித்தான். அவர் கள் முன் சொன்னதையே சொன்னர்கள். அரசன் யாவ ரையும் அழைத்துக் கொண்டு குளத்தை அடைந்தான். நாயனரை நோக்கி, 'கண்களைத் திருவருளால் பெற முடியும் என்பதைக் காட்டும்" என்ருன். -

தண்டியடிகள் உடனே எழுந்து, "நான் சிவனுக்கு அடிமையானது உண்மையானல் இன்று நான் கண் பெற வேண்டும்; இங்குள்ள சமணர் கண்ணே இழக்க வேண்டும்' என்று கூறி அஞ்செழுத்தை ஒதிக் குளத்தில் மூழ்கினர். இறைவனேத் தொழுதபடியே அவர் நீரிலிருந்து எழுந்தபோது அவருக்குக் கண்ணுெளி கிடைத்துவிட்டது. அதே சமயத்தில் சமணர்கள் கண் ஒளியை இழந்தார்கள். மன்னன், சமணர்கள் முன்னே கூறிய உறுதிமொழிப்படி அவர்களே ஊரை விட்டு ஓடச் செய்தான். அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் போய் விட்டனர். சமணர் மடங்கள் இருந்த இடங்களில் அவற்றை இடித்துக் குளத்தை விரிவாகச் செய்து தண்டியடிகளே அடிபணிக் தான் அரசன். அப்பெரியார் கண் பெற்ற:பயனுக இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/15&oldid=585648" இலிருந்து மீள்விக்கப்பட்டது